மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்

• மடு தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களும் விரைவில் அபிவிருத்திச் செய்யப்படும். • மன்னாருக்கு கிடைக்காமல் போன அபிவிருத்தி விரைவில் கிட்டும். • மன்னார் வைத்தியாசாலைக்கு மிக விரைவில் CT ஸ்கேன் இயந்திரம் வழங்கப்படும். • அரசியல் தேவைகளுக்குள் சிக்கிகொள்ளாமல் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றுவோம். • மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. • பல வருடங்களுக்கு பின்னர் மன்னார் அபிவிருத்திக்கு அதிகூடிய தொகையை ஒதுக்கியுள்ளமைக்காக ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் … Read more

ஹஜ் வாழ்த்துச் செய்தி

ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த … Read more

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

• உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது – ஜனாதிபதி. உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி … Read more

முஸ்லிம் மாணவிகள் சிலரின் உயர்தர பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு

• பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் உறுதி திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த முஸ்லிம் மாணவிகள்  இன்று (15) ஆளுநர் செயலகத்தில் வைத்து முறைப்பாடு செய்தனர். பரீட்சைகள் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு எதிராக  காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவிகள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் … Read more

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

• அனைத்து மட்டங்களிலுமான கிரிக்கட் பயிற்சி மற்றும் இருப்பை பாதுகாப்பதற்காக பல பரிந்துரைகள். • கிரிக்கட் சபை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வது குறித்து கவனம். இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து … Read more

தேசிய செயற்பாட்டு மைய தீர்மானங்கள் – பிரதமர் அலுவலகம்

அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தேசிய செயற்பாட்டு மைய குழுவின் பல தீர்மானங்கள்… அண்மையில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் கூடிய தேசிய செயற்பாட்டு மையக் குழு, அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பல தீர்மானங்களை மேற்கொண்டது.   ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஏற்பாடுகளின் கீழ் உள்கட்டமைப்பு, பொது வசதிகள் திட்டங்கள் மற்றும் கல்வித் துறை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. … Read more

கண்டி மாவட்டம் பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டம்…

கண்டி மாவட்டம் ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குற்பட்ட பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டத்தை நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (14.06.2024) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இக்குடி நீர் திட்டத்தை 8.4 மில்லியன் ரூபாய் செலவில் 84 குடும்பங்களை சேர்ந்த பயனாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்னவுடன் இனைந்து ஆரம்பித்து வைத்தார்.    இந்நிகழ்வில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது…   நாட்டில் … Read more

கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்.

கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் நேற்று (14) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.   விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும் ஆளுநரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இலங்கை இளைஞர் சமூகத்தின் பொதுக் கற்றலுக்கான கல்வித் தளம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

புதிய பொருளாதார மாற்றத்திற்காக இலங்கையும் டிஜிட்டல் மயமாக்கலுடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி. இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. Public Learn என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச பாடநெறிகளை பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும். இந்த தளமானது ரீஜண்ட் குளோபல் நிறுவனத்தால் (Regent Global) இயக்கப்படுவதோடு இலங்கையில் இதனை அறிமுகப்படுத்த … Read more

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட கலந்துரையாடல்

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைய வேண்டுமா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆய்வு செய்ய … Read more