தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம்

கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. கல்வியே நாட்டின் பலம் – ஜனாதிபதி. எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை இன்று (14) பிற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இக்கட்டான பொருளாதாரச் சூழலிலும் அரசாங்கம் … Read more

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்து, நாட்டில் துரித வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

ஜனநாயக சோசலிசக் கொள்கைகளிலிருந்து நான் ஒருபோதும் விலகவில்லை- ஜனாதிபதி. அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதுடன், முழு நாட்டையும் துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த இலக்குகளை அடைவதற்காக அரசியலமைப்பிற்குள் இருந்து செயற்படும் வகையில் பொருளாதார மாற்ற சட்டத்தில் அதனை உள்ளடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனவே அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படுவதாக எவரும் குற்றம் சுமத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், நாட்டில் தற்போதுள்ள … Read more

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கீகாரம் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அசோக்க … Read more

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக் கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த (11.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார … Read more

கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நீர் முதல்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்..

கம்பஹா நகரை சுற்றியுள்ள நீர் முதல்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நகரை பாதிக்கும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். இதன் கீழ் கம்பஹா நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான கால்வாய் மற்றும் குண்டி கால்வாயில் சிக்கியுள்ள கழிவுகள், ஜப்பானிய ஜபரா மற்றும் பாசிகளை அகற்றும் பணியை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தற்போது ஆரம்பித்துள்ளது. கம்பஹா குந்திவில கால்வாய்க்கு அருகில் பல இடங்களில் இந்த கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அண்மையில் பெய்த கடும் … Read more

பல்கலைக்கழக நுழைவிற்காக நிகழ்நிலை விண்ணப்பிக்கும் செயற்பாடு இன்று (14) முதல் ஆரம்பம். . .

2023/2024 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக நுழைவிற்காக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (14) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். நேற்று (13) பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதன்படி இன்று காலை 6.00 மணி முதல் www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை 2024 ஜூலை 05 ஆம் திகதி வரை பல்கலைக்கழக … Read more

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன், அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தேடப்பட்டுவந்த … Read more

சட்டவிரோதமான முறையில் விற்பனை செயவதற்காக தயாரிக்கப்பட்ட 4600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்

2024 ஜூன் மாதம் 11 ஆம் திகதி ராகம பொடிவிகும்புர பிரதேசத்தில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் ஒருவர் (01) நாலாயிரத்து அறுநூறு (4600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டும் நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி மேற்கொண்ட … Read more

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை..

கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரப்) பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சகர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தை கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை (14) கிடைக்கவுள்ளதுடன் அவ்வரிக்கை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதன்படி கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் ஆரம்பம்…

2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் நாளை (14) முதல் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி 2024 ஜூலை மாதம் 5ஆம் திகதி என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.