பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக அலுவலக தளபாட கொள்வனவுக்காக 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் நாட்டின் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவிற்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலக தளபாட கொள்வனவுகளுக்காக 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொண்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, கட்டட நிர்மாணப் பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் … Read more

மலையக மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக “சதுடு வது” எனும் சந்தோஷமான தோட்ட மண் (Happy Estate) வேலை திட்டம்

மலையக மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக “சதுடு வது” எனும் சந்தோஷமான தோட்ட மண் (Happy Estate) வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகரிக்கும் சுகாதார செயல்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தி 30 வருடங்கள் சீர்திருத்தம் இடம்பெறாத பணிமனையில் ஆரம்பிக்கப்பட்டது. பெருந்தோட்ட கைத்தொழில் துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் ஆலோசனைக்கு இணங்க சுகாதார செயலாளர் கோட்பாட்டின் படி நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேளை … Read more

பல்வகையான பிரதிலாபகங்களுடன் ஜயகமு ஸ்ரீலங்கா புத்தளத்தில்

”ஜயகமு ஸ்ரீலங்கா” தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் ஜுன் 14,15 சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. “ஜயகமு ஸ்ரீலங்கா டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய புதிய தொழில் உலகத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ மக்கள் நடமாடும் சேவையானது இன்றுவரை பதினாறு மாவட்டடங்களில் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது. … Read more

பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை

“பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு ” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறையானது இன்றைய தினம்(13) யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கிறிசலிஸ் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் “பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் “கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக இப் பயிற்சி பட்டறை … Read more

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக் கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த (11.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்று நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் தெரிவித்தாவது, அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் … Read more

எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் அறிவுத்திறன் நிறைந்த இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்- ஜனாதிபதி

எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் அறிவும் பயிற்சியும் நிறைந்த இளைஞர் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு உயர் வருமான வழியை உருவாக்கத் தேவையான பொருளாதார செயற்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் (12) சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றும் இதன்போது வழங்கப்பட்டது. … Read more

அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களின் பயன் விரைவாக மக்களை சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாகாண ஆளுநர்களுடன் (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் … Read more

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகானது வடமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலங்களினூடாகவும் கலாசார அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்திட்டமானது ஐனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பிரதேச செயலகங்களினூடாக நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகினூடாக பிரதேச செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு கலைஞர் ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் கலாசார உத்தியோகத்தர் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. கலைஞர்களை வலுப்படுத்தும் செயல்திட்டத்தின் முதற்கட்டமாக கலைஞர் ஒன்றுகூடலானது முன்னெடுக்கப்பட்டது. இவ் ஒன்றுகூடலானது பிரதேச கலைஞர்களின் … Read more

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்-நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த 18 மாதங்களில் சுமார் 75 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு நாட்டுக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் … Read more