மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் ஒழுங்கமைல் நேற்று (12) மன்னார் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் காற்றாலை செயற்றிட்டம், கனிய மணல் அகழ்வு, பூரணப்படுத்தப்படாமல் உள்ள வீதிகள், காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், போக்குவரத்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பிலும் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் … Read more

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி. அல்விஸூக்கு தலைமைப் பொறுப்பு. குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுத்தருமாறு அறிவுறுத்தல். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாக திணைக்களத்தினால் காணிகள் விடுவிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாக திணைக்களத்தினால் காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது. மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட் பையில் அமையப்பெற்றுள்ள மாவட்ட செயலகத்தின் நிருவாக கட்டடத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் வன வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் இ.ஏ.பி.என். எதிரிசிங்க கலந்துகொண்டிருந்தார். வன திணைக்களத்திற்கு வர்த்தமானி பத்திரத்தில் வெளியிடப்பட்ட நிலங்களில் சில பகுதியினை விடுவிப்பதற்கான உயர் மட்ட கலத்துரையாடல் இதன் போது நடைபெற்றது. … Read more

இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு கடற்றொழில் அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். திரு. நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குச் சென்று வந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளதாகவும், நேற்று ஜனாதிபதி ஊடக பிரிவு ஏற்பாடு செய்த ஊடகங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக ஜனாதிபதி … Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2500 கொடுப்பனவை 5000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அண்மையில் நடைபெற்ற அசசாங்கத்தின் செலவீனங்னகள் தொடர்பான அமைச்சரவை உபகுழுவில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க முன்வைத்த யோசனை குறித்து ஆராய்ந்து, நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சசாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் … Read more

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் சேவை நீடிப்பு.. அது பாரம்பரியமாக தொடரும் நிலை அல்ல.. – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன.

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது பாரம்பரியமாக தொடரும் நிலை அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆகியோரின் சேவை நீடிப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பிற்கு அமைவாக அக்டோபர் … Read more

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

சுற்றுலா துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய பேருந்துகள் மற்றும் 75 வேன்களை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு 2024 ஆம் … Read more

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர் – அமைச்சர் ஜீவன் சந்திப்பு…

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர், திரு. கெப்ரியல் கிராவு, அவர்களுக்கும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் (10.06.2024) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற ஓரங்கட்டப்பட்ட சமூகமான பெருந்தோட்டத் துறையினர் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களுடைய கல்வி, பொருளாதார வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் ஏனைய சமுகங்களுடன் உள்ளடக்கி ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் ஒத்துழைப்பை மேலும் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது … Read more

பாராளுமன்ற செயலாளர் நாயகங்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் தலைமைத்துவத்துக்கான வதிவிட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு

பாராளுமன்ற செயலாளர் நாயகங்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் தலைமைத்துவத்துக்கான வதிவிட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்றங்களின் செயலாளர் நாயகங்கள் மற்றும் அதிகாரிகளுக்காகப் பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைமைத்துவம் தொடர்பான வதிவிட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய இராஜ்ஜியம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 15 பொதுநலவாய நாடுகளின் சுமார் … Read more

இலங்கை – நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. போட்டி இடம்பெறவிருந்த அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய, இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.