அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அன்றி நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்

அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை தவிர நாட்டின் வெற்றிக்கான வேறு வேலைத் திட்டங்களும் இல்லை. அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் வரும். அரசியல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கினாலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டம் எந்த தரப்பிடமும் இல்லை. நபர்களைப் பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – ஜனாதிபதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி … Read more

முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. கட்டட நிர்மாணப்பொருட்கள், விவசாய நடவடிக்கைகள், வேலைக்கான கூலி, இயந்திரங்களுக்கான கூலி, நுகர்வுப் பொருட்கள் எனப் பல்வேறுபட்ட பொருட்களுக்கான விலை நிர்ணயம் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது நாட்டில் எரிபொருட்களின் விலை சற்று குறைவடைந்ததால் பொருட்கள் , சேவைகளுக்கான பொறுமதிகளிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் துறைமுகம் கடற்றொழில் துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும்

அஷ்ரப்பின் கனவையும் நனவாக்குவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் ஒலுவில் துறைமுகம் கடற்றொழில் துறைக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இத்துறைமுகம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அமரர் அஷ்ரப் கண்ட கனவையும் நனவாக்கப் போவதாக தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் நேற்று (11.06.2024) இடம்பெற்ற ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிதத்தாவது: ஒலுவில் முறைமுக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை துறைமுக அதிகார … Read more

அரச துறையில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க ஜனாதிபதியினால் நான்கு பணிப்பாளர் நாயகங்கள் கொண்ட நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.ஜே. நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆலோக பண்டார, நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க, வைத்தியர் டெரன்ஸ் காமினி டி … Read more

யாழில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 65 கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி வகுப்பானது உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ. தர்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2023.12.02 இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் எழுத்து மூலம் மற்றும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், ஆட்சேர்ப்பு செய்யும் புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம … Read more

இருபதுக்கு 20 இன் அரையிறுதிப் போட்டிகள் 24ஆம் திகதி ஆரம்பமாகும்..

நாட்டில் நிலவும்; மழையுடனான காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பிற்போடப்பட்ட இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளை இம்மாத இறுதியில் நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அரையிறுதிப் போட்டிகள் இம்மாதம் 26ஆம் திகதியும், இறுதிப் போட்டிகள் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இந்த 3 போட்டிகளும் கொழும்பில் பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளன.

T20 WC 2024 பங்களாதேஸை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று (10) இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஸ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது. அதன்படிஇ பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதன்படிஇ தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

அமைச்சர் மனுஷவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டு தொழிலாளர் சந்தை தரநிலைகள் மற்றும் தொழில் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அமைச்சின் வேலைத்திட்டம் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது சர்வதேச சட்டங்கள் அங்கீகரிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எப்.ஹூங்போவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த … Read more

வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் செர்கெயி ஆகியோரிடையே சந்திப்பு

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக இடம்பெறும் பிரிக்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் அமர்வு – 2024 இல் கலந்து கொள்வதற்காக ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அலி சப்ரி நேற்று (10) ரஷ்ய நாட்டிற்கான வெளிநாட்டு அமைச்சர் செர்கெயி லெவ்ரோவ் இடையேயான இரு தரப்பு கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது, சுற்றுலா, உயர் கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற துறைகள் உட்பட இருதரப்பு தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்கு வெளிநாட்டு அமைச்சர்களும் இணங்கினர். … Read more

ஒலுவில் துறைமுக மீள் புனரமைப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பாக ஆராய்வு

ஒலுவில் துறைமுகத்தை மீள் புனரமைப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் , நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயும் கூட்டம் இன்று (11) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. ஒலுவில் துறைமுகத்தை புனரமைப்புச் செய்து பயனுடையதான திட்டங்களை முன்னெடுக்கும் திட்ட வரைபுகளை பல நிறுவனங்கள் அமைச்சரிடம் முன்வைத்துள்ள நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்து அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் தொடர்புபட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மேற்படி கலந்துரையாடல் … Read more