ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜூன் 19 ஆம் திகதி

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 396 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1758 பேருக்கு நிலுவைத் தொகையுடன் புலமைப் பரிசில்கள். கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 5,000 புலமைப் பரிசில் பயனாளர்கள். ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, பொருளாதார சிரமங்களோடு கல்வி மற்றும் இணைப்பாடவிதானங்களில் விசேட திறமைகளை … Read more

சர்வதேச ஈரநிலப் பூங்கா ஒன்றியத்தின்; முதல் மாநாடு ஜூன் மாதம் 17 முதல் 21ஆம் திகதி வரை பத்தரமுல்லையில்…

சர்வதேச ஈரநிலப் பூங்கா ஒன்றியத்தின் பங்களிப்புடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் முதல் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெறவுள்ளது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்தா தெரிவித்தார். இந்த மாநாடு குறித்த தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள … Read more

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த உடன்படிக்கைகளின்படி செயற்படப் போகிறார்களா இல்லையா என்பதை ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் … Read more

புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்லும்போது முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் தலைமுறை அவசியம்

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையின் 05 ஆவது இளைஞர் பாராளுமன்றத்தின் 06 ஆவது அமர்வின் இரண்டாம் நாள், விசேட அதிதியாக கலந்துகொண்ட போதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் ஆறாவது அமர்வு ஜூன் … Read more

மன்னார் மாவட்டத்தில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள்   ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள்  மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன்   தலைமையில் இன்று (10) ஆரம்பமானது. மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்களுக்கும்  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 கிராம அலுவலர்களுக்கான  03 மாதகால பயிற்சி  இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு 12 பேரும்,  நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு 12 பேரும், முசலி பிரதேச செயலத்துக்கு 7பேரும், மடு பிரதேச செயலகத்துக்கு 2 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு 2 … Read more

ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு..

போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன என்று ரயில்வே பிரதி; பொது முகாமையாளர் ஜே. என். இந்திபொலகே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். வேலைநிறுத்தம் முடிவடைந்தாலும், இன்று பிற்பகல் ரயில் போக்குவரத்தில்; சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என்றும், நாளை காலை முதல் ரயில் போக்குவரத்து வழமைபோல் இயங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொது நூலகம் தொடர்பாக பிரதமர் கலந்துரையாடல்

தற்போது கட்டட நிருமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மபொது நூலகக் கட்டடத் தொகுதியின் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை க்கான விசேட கலந்துரையாடல் பிரதமரும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சுற்றாடல் ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்பர உட்பட கட்டடத் திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர், … Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,500 ரூபாய் உதவித்தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த 2500 ரூபா மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம்; தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அகுனகொலபேலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியபோதே அவர்; இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், முன்பள்ளி ஆசிரியர்களின் 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி … Read more

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதிபூண்டனர்

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் … Read more

புதிய கட்டிடத்திற்கு இடம்மாறும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இன்று (10.06.2024) முதல் திராய்மடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக கட்டிடத்தில் இயங்கும் என்பதை சகல பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில கிளைகளின் சேவைகள் மாத்திரம் மறு அறிவித்தல் வரை பழைய மாவட்ட செயலகம் இயங்கிய கட்டடத்தில்  சேவைகளைத் தொடரும் என அவறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இயங்கும் பிரிவுகள் வருமாறு… • விளையாட்டுப்பிரிவு • நுகர்வோர் அதிகார சபை • சிறு கைத்தொழில் பிரிவு • … Read more