நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.  நுகர்வோர் அதிகார சபையில்  நாடு முழுவதும் 277 பேர் மாத்திரமே  காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  அத்தொகை போதுமானது அல்ல என்றும் புதிய ஆட்சியர்ப்புகள் இடம் பெறுவதுடன் அதற்காக அவசியமான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களுக்குள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் நவீன் பெர்னான்டோ கூறினார். எரிபொருள் உட்பட பொருட்களின் … Read more

களப்பு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டநிதியை ஏன் உரிய முறையில் பயன்படுத்த வில்லை – நாரா அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் கேள்வி

நாடெங்குமுள்ள களப்புகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்தாமை தொடர்பாக தேசிய  நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் (நாரா- NARA) அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். 2024ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி வரைக்குமான நாராவின் நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (07.06.2024) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா உதவித் தொகை

• அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்த விசேட வேலைத் திட்டம். • வெள்ள அனர்த்தத்தைத் தடுக்க முறையான திட்டம். • களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு புதிய நகரம் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மக்களின் நலன்களை விசாரிக்க சென்ற சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க … Read more

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டி நிறைந்த ஏற்றுமதிச் சந்தையை வெல்லக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

சந்தைப் போட்டியை எதிர்கொள்ளாத பொருட்களைக் கைவிடுவது நல்லது. விவசாய நவீனமயமாக்கல் முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு. நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இல்லையெனில் எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏற்றுமதி சந்தையில் போட்டியை எதிர்கொள்ள … Read more

மாத்தளை மற்றும் கொழும்பு செயற்கை ஹொக்கி மைதானங்கள் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படும்

விளையாட்டில் ஒரு புதிய யுகத்தை உருவாக்கத் தயார் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க. மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் ஒரு சில விளையாட்டு சம்மேளனங்களில் நிலவும் சட்ட … Read more

பொருளாதார சீர்த்திருத்தச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புதவற்கான முதல் அடியை வைத்துள்ளோம்!

அடுத்த மூன்று வருடங்களில் இளைஞருக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும் -ஜனாதிபதி. பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் மேற்படி இணக்கப்பாட்டுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சரியான திட்டத்துடன் செயற்பட்டால் மாத்திரமே சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் … Read more

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (08) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் சாத்தியம்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (08) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

நோர்வேயின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் – கிழக்கு மாகாண ஆளுநர் இடையிலான சந்திப்பு..

நோர்வேயின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சிசிலி மிர்செத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஒஸ்லோவில் சந்தித்தார். அமைச்சர் சிசிலி மிர்செத் அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட செந்தில் தொண்டமான், இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். நோர்வேயின் உதவி எப்போதும் இலங்கைக்கு பக்க பலமாக இருந்துள்ளது என தெரிவித்த செந்தில் தொண்டமான், இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200 வது வருடத்தின் முதல் … Read more

பாரம்பரிய உணவுகளின் பயன்பாடு மற்றும் அவற்றின் தொழிற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!!

பாரம்பரிய உணவுகளின் போசனை மருத்துவம் மற்றும் அவற்றின் தொழிற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதானின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (05) இடம் பெற்றது. அன்றாட வாழ்கையில் நாம் உண்ணும் பாரம்பரிய உணவிலுள்ள பதார்த்தங்களின் செயற்பாடுகள், சிறுதானியங்கள், எதிர்போசனைக்கூறுகள் மற்றும் உணவினால் ஏற்படும் பக்க விளைவுகள் அதன் நிவாரணம் பற்றிய விளக்கங்களை அவுஸ்ரேலிய மருத்துவர் நித்தி … Read more

T20 உலகக் கிண்ணத்திற்கு இலங்கை கிரிகெட் அணி எதிர் நோக்கிய சிக்கல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக ஐ. சி. சி க்கு கடிதம்…

T20 உலகக் கிண்ணத்திற்குச் சென்ற இலங்கை கிரிகெட் அணி எதிர்கொண்ட சிக்கல்கள் சில தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (ஐ.சி.சி) கடிதம் அனுப்பியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விமானமொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 7 மணித்தியாலங்கள் தங்கியிருக்க வேண்டியேற்பட்டமை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். T20 … Read more