“ரவி – அரை நூற்றாண்டு சினிமா சுய பிரதிபலிப்பு” ஜனாதிபதி தலைமையில் பாராட்டு நிகழ்வு

பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய 5 தசாப்தங்களாக இலங்கைத் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி “ரவி – சினிமா அரை நூற்றாண்டு சுயநினைவு” பாராட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது. 1974 இல் திரையிடப்பட்ட ‘தரங்கா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இணைந்த ரவீந்திர ரந்தெனிய என்ற நடிகர், சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் என்பதோடு தனக்குக் கிடைத்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து கடந்த … Read more

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க, கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொள்ளுப்பிட்டி வாழுகாராம மகா விகாரை உட்பட ஐந்து மகா விகாரைகளின் விகாராதிபதி, ஊவா பிராந்திய பிரதம … Read more

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படும்

மறு அறிவித்தல் வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ளது. இது ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்…

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது நேற்று (05) இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கான நடவடிக்கைககளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் … Read more

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் முல்லைத்தீவு விஜயம்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. Marc-André Franche அவர்கள் இன்றய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மாவட்டச் செயலாளர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள், மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர். திருமதி.வா.கிருபாசுதன் அபிவிருத்தி உத்தியோகத்தர். திரு.ரஜனிக்காந் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவித்தித் திட்டத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2019/2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தாதியர் பயிற்சிக்காக உள்வாங்குதல்..

2019/2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தாதியர் டிப்ளோமாவிற்கு உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை இவ்வரடத்தின் ஜனவரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் அமைந்துள்ள தாதியர் கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. முதல் தடவை நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள முடியாமல்போன பரீட்சார்த்திகளுக்காக, மீண்டும் ஒரு சந்தர்ப்பம் மே மாதம் 26 ஆம் திகதி வழங்கப்பட்டது. நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட பரீட்சார்த்திகளிடையே தாதியர் டிப்ளோமா பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட முன், … Read more

ரெபியல் தென்னகோன் வித்தியாலயம் மூடப்படக் கூடாது… – பிரதமர் தினேஷ் குணவர்தன

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்… மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (06.05.2024) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்கு நல்ல பயிற்சிகள் கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளோடு இருந்து முதிர்ச்சியடைந்துள்ளீர்கள். ஒரே பிரச்சினை தொடர்ந்தும் இருக்குமானால், அது அக்கறையின்மையை காட்டும். சாதாரண சேவைகளுக்கு மேலதிகமாக, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி, கலாசார, … Read more

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செயற்திட்டமானது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதனூடாக எழுமாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இச்செயற்பாட்டிற்கான பூரண ஒத்துழைப்பினை மாவட்ட வீதிப்போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கியிருந்தனர். அத்தோடு விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்திட்டத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களும் Vehicular Emission Test Trust Fund உத்தியோகத்தர்களும் … Read more

கொரிய சட்ட வைத்திய ஆலோசனை மற்றும் கல்வி நிறுவனத்தின் (KOFO) அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர்

கொரிய சட்ட வைத்திய ஆலோசனை மற்றும் கல்வி நிறுவனத்தின் (KOFO) அதிகாரிகள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையில் சட்ட வைத்தியத் துறை மற்றும் தோற்று நோய் கட்டுப்பாட்டு நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அந்த அதிகாரிகள் சபாநாயருக்கு விளக்கமளித்தனர். இது அறிவுப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஆகும் என … Read more

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் நேற்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்களும் குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும் பல்கேரியா … Read more