இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக துஷார லொக்குகுமார நியமனம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த துஷார லொக்குகுமார கடந்த 30.05.2024ம் திகதி முதல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அவர் பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் அந் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டி.வி. … Read more

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக அதிகாரிகள் (ISTRM) புத்தளம் மாவட்டத்திற்கும் நேரடி விஜயம்

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மக்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயவும் சாத்தியமான தீர்வுகள் குறித்து கலந்துரையாடவும் என உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) கடந்த மே 13 முதல் 15 ஆம் திகதி வரை புத்தளம் மாவட்டத்தில் பல கூட்டங்களை நடத்தியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டங்களின் போது, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான … Read more

நாடு முழுவதும் 250 புதிய பாலங்கள் நிர்மாணிக்கத் திட்டம்

• நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, அதன் பலன் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். • பல பரிமாண வறுமையை 10% வரை குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம் – நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் இலங்கையில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்ததை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய … Read more

பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி 21 தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு மீதான தடை உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) மறுத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா தலைமையிலான நீதிபதிகள் குழுவினால் இந்த மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது தோட்ட கம்பனிகள் சார்பில் கோரப்பட்ட தடை உத்தரவை … Read more

எலோன் மஸ்க் இலங்கை விஜயம் பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றம்  அடையும்  

உலகின் முதன்மை கோடீஸ்வரரான எலோன் மஸ்க் போன்ற தொழில்முனைவோர் எமது நாட்டுக்கு வருகை தருவது  ஊடாக பொருளாதார ரீதியாக துன்பப்படும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அம்முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் அவரைப் பொருளாதாரக் கொலையாளி என்று அழைக்கின்றனர் என அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார் தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற ஜயகமு ஸ்ரீ லங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டத்தின் இரண்டாம் நாள்    நிகழ்வு  பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில் கடந்த … Read more

களனிவெளி புகையிரதப் பாதையில் வாகையிலிருந்து அவிஸ்ஸாவெலை வரை சில தினங்களுக்கு மூடப்படும்

களனிவெளி புகையிரதப் பாதையில் கொஸ்கம, புவக்பிடிய, ரன்வல, அவிஸ்ஸாவெல்ல வரை சில பகுதிகளில் மண்சரிவு, பாலம் உடைப்பு மற்றும் வெள்ளம் காரணமாக சில நாட்களுக்குப் பாதையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். களனிவெளி புகையிரதம் கொழும்பிலிருந்து வாகை மாத்திரம் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.   இதனிடையே வாகையிலிருந்து இரண்டு புகையிரதங்களும், பாதுக்கையிலிருந்து புகையிரதங்கள் இரண்டு கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக புகையிரதத் திணைக்கள … Read more

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

விமர்சனம் செய்வது எளிதானது – தீர்வு காண்பது கடினமானது

• நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முறையான திட்டம் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் இல்லை   • பழைமையான அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.   • பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மாற்றுத் திட்டம் ஏதேனும் இருந்தால் முன்வைக்கவும்.   • அன்றேல் பொருளாதார பரிமாற்றச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் – ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் … Read more

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தேவையான நிதியை உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

• முழுமையாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை.   • பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் சுகாதார வசதிகளை தொடர்ந்து வழங்க ஏற்பாடு.   • அவசரகால சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கும் 117 அவசர அழைப்பு இலக்கம் 24 மணி நேரமும்.   • வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் சேதமடைந்த இடங்களைப் பார்வையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை.   • வெள்ளம் அல்லது நீர் தேங்கியுள்ள பகுதிகளில் … Read more

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும்…  

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை… இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more