உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு  நடந்து கொள்ளுங்கள்… – வைத்தியர்கள்  கோரிக்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக  நடந்து கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர்தரப் பரீட்சை என்பது வெறுமனே மற்றுமொரு  பரீட்சை மாத்திரமே. இவற்றில் தோல்வி அடைந்தால் எதிர்கால செயற்பாடுகள் தடைப்படும்  என எண்ணக்கூடாது. முதலில் பெற்றோர் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக செயற்படுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறானவர்களுக்கு சிறந்த மன தைரியத்தை வழங்க வேண்டும். அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு … Read more

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கலாம்…

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பரீட்சாத்திகள் தமது பெறுபேறுகள் தொடர்பாக திருப்தி அடையாவிட்டால் www.onlineexams.gov.lk.eic என்ற இணையதள முகவரி ஊடாக மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் ஜூன் ஐந்தாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இந்த முகவரியின் ஊடாக மீளத் திருத்தும் பணிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  

இம்முறை உயர்தர பரீட்சையில்  173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை…

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி   173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். அதேவேளை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 613 (169,613) பேர் தோற்றினர்.  அவர்களில் ஒரு லட்சத்து 173, 444 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர்.  அதில் 10,484 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். இது தகைமை அடிப்படையில் நூற்றுக்கு 64.3% … Read more

அரசியலமைப்புக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

• நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. • ஒத்துழைக்கத் தவறுவது அரசியலமைப்பு மீறலாகும். • இறக்கும் தருவாயில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி இப்போது மெல்ல குணமடைந்து வருகிறார். • அதற்கான வேலைத்திட்டத்திற்கு வழிகாட்டி ஆதரவளித்த மகா சங்கத்தினருக்கு நன்றி – கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை திறந்து வைத்து ஜனாதிபதி உரை. • “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல சுதேச … Read more

இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டுக்கான போட்டியில், 20 நாடுகள் நான்கு குழுக்களாக போட்டியிடவுள்ளன.  ‘A’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ‘B’ பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ‘C’ பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினி மற்றும் … Read more

நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில்தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில்தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பலத டவைகள் மழை … Read more

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, … Read more

முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல் பொய்யானது

• நலன்புரிச் சபையினால் அதிகரிக்கப்பட்ட முதியவர்களுக்கான கொடுப்பனவு மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 மே மாதம் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தேவையான சுமார் 1518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப காரணங்களினால் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் இரண்டாம் … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க … Read more

ஜனாதிபதி இளம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

நாட்டின் எதிர்கால பயணத்தில் இளம் தலைமுறையை வலுவான முறையில் ஈடுபடுத்த புதிய பொறிமுறை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.   ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளையோரின் பங்கேற்புடனான நிகழ்வுகளின் ஒரு அங்கமாக “இளையோர் கலந்துரையாடல் – நாளை இலங்கையின் இளம் தலைவர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய பொருளாதார மறுசீரமைப்பு … Read more