மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் … Read more

இன்று (31) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையில் திருத்தம்.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர்  டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் … Read more

படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு கடற்றொழில் அமைச்சர் பணிப்பு

படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவர் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் நேற்று (30.05.2024) நடைபெற்றது. இதன் போது காணி சுவீகரிப்பு தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து பலதரப்பினரால் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. … Read more

ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் த்ரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி

? த்ரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா த்ரிபோஷ நிறுவனம் அவதானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் த்ரிபோஷவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்தார். இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்தத் த்ரிபோஷவை நிபந்தனையுடன் உற்பத்தி … Read more

எதிர்கால சமூக,பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும்

அது தொடர்பில் பல்கலைக்கழக கட்டமைப்புக்கு பெரும் பொறுப்பு உள்ளது. அடுத்த 05 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டுமானால், ஏற்றுமதி பொருளாதாரமாக துரிதமாக பரிமாற்ற வேண்டும். அன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் – ஜனாதிபதி. நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என … Read more

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தீகவாபிய புனரமைப்பு திட்டத்தை ஆய்வு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி ஆகியோர் 2024 மே 30 ஆம் திகதி ‘தீகவாப்பிய’ மற்றும் ‘நீலகிரிய’ புனரமைப்புத் திட்டத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் விஜயத்தை மேற்கொண்டனர். அதிதிகள் விகாரையின் … Read more

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும் எஞ்சிய 65,531 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்றையதினம் (30.05.2024) ஆராயப்பட்டது. இதன்போது வைத்தியசாலை … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024மே 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும்தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதனால், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் … Read more