பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கூடவுள்ளது 1) ? பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூன் 4 2) ? கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூன் 5 3) ? இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூன் 6 4) பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். … Read more

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பாடசாலை மற்றும் சகல சாரணர் அமைப்புகளின் 2024 ஆம் வருடத்திற்கான பொதுக்கூட்டம் நேற்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் அமைப்பின் தலைவரும் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளர் மான திருமதி ஜஸ்டிங்கா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டாலுவல்கள் அமைச்சின் அதிகாரியும் மாவட்ட சாரணர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான சரவணமுத்து நவநீதன் வரவேற்புரை நிகழ்த்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 பதிவு செய்யப்பட்ட … Read more

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாடென்ற ரீதியில் வீழ்ச்சியடைந்த நாம் இப்போது தான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளோம். நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கால மாற்றங்களுக்கு ஏற்ப தொழிற்சங்க இயக்கங்கள் முன்வர வேண்டும். வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அரசின் பலத்தைத் தக்கவைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2027ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அரச நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபைகளை நியமிப்பதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும். எதிர்காலத்திற்கு ஏற்ற … Read more

நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர் – நிதி இராஜாங்க அமைச்சர் 

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையான இலக்கைக் கொண்டிருந்தாலும், ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் … Read more

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்கு 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக 824 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான  டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்று (30) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. கடந்த மாவட்ட … Read more

வானிலை அறிக்கை

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் … Read more

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக விரிவான திட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்

பசுமை வலுசக்தித் துறையின் முன்னேற்றத்திற்காக சர்வதேச நிபுணத்துவம் மற்றும் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. நிலைபேறான மற்றும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இன்று (29) முற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற “வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை” எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் … Read more

ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்காது… – பிரதமர்

ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறும். மக்கள் திரளைப் பார்த்து எந்த அரசியல் முடிவும் எடுக்கப்பட மாட்டாது. குழப்பமடையாது பின்வாங்காது முன்னோக்கிச் செல்வோம்… நேற்று (2024.05.29) தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தின் விசேட கலையரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்- மாபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமான மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் எமது நாட்டின் இலக்கியத்தின் பெருமையை முன்னிறுத்தி இலக்கியம், … Read more

ஐந்து இலட்சம் புதிய பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளுடன் கூடிய வர்த்தக வாய்ப்புகள்..

கிராமிய மட்டத்தில் கோழி வளர்ப்பு தொழிலை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை… முட்டை அடைகாக்கும் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் சீதாவக்கையை சேர்ந்த 5000 பேருக்கு நன்மை… கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று முன்தினம் (28.05.2024) சீதாவக்கை பிரதேச சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் … Read more

வடக்குப் புகையிரதப் பாதையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடரும்…. – அமைச்சரவைப் பேச்சாளர்

வடக்குப் புகையிரதப் பாதையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்றும் அதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பொசன் பௌரணமி தினத்தில் விசேட பஸ் போக்குவரத்து சேவையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.    தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், போசொன் … Read more