ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை

  ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்தது. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன-ஜனாதிபதி. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே … Read more

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும்  – வட மாகாண  ஆளுநர்

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் சிறப்பாக பேணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து  வருகின்றனர். அதேபோல … Read more

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் – கனேடிய உயர்ஸ்தானிகர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் நேற்று (29/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த ஆளுநர், … Read more

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்கப்படும்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். “கருசரு” வேலைத்திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு பண்டிகைகளைக் கொண்டாட … Read more

பாராளுமன்றத் தேர்தலொன்றை அவசரமாக நடாத்துவதற்கான அவசியமில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்

அரசியலாமைப்பின் ஒழுங்குவிதிகளின் படி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும், அதற்காக இவ்வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அவசியமொன்றில்லை என்றும் வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவது அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர்களுடனான சந்திப்பின் போதே செய்தியாளர் ஒருவர் … Read more

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட  செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் (10) திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் … Read more

சுங்கத் திணைக்கள வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது எவ்வித செல்வாக்கும் இல்லை

 சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தும் நோக்கில் தற்போது வெற்றிடங்கள் காணப்படும் சுங்க அதிகாரி மற்றும் சுங்கப் பரிசோதகர் போன்ற பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு எவ்விதத்திலும் செல்வாக்குகள் இடம்பெறவில்லை என்றும், யாரேனும் அவ்வாறு தலையீடுகளை மேற்கொண்டு சுங்கத்திற்குள் நுழைவதற்கு முயற்சிப்பார்களாயின்  அது கருத்திற் கொள்ளப்படாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.   அதன்படி மேற்படிப் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நேர்முகப் பரீட்சைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் … Read more

தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாய சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – வெகுசன ஊடக அமைச்சர் 

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் காணப்படும் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவதே என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28)இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.   இன்றைய பொருளாதார சிக்கலில் தோட்டத் தொழிலாளர்களின் போசனை மட்டம் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்காகக், குறைந்;தது அவர்களுக்கு உரித்தாக வேண்டிய சம்பள மட்டம் … Read more

கிராம சேவகர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தற்போதுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்து பொதுவான உடன்பாட்டை எட்டுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். கிராம சேவகர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிராம சேவகர்களின் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று … Read more

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் அவற்றின் தற்போதைய மட்டங்களில்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 மே 27ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் … Read more