மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெறும் 306 கிராமிய வீதி நிருமாண வேலைத்திட்டங்கள்  தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  306 கிராமிய வீதி நிருமாணம் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்டப் அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாவட்டத்தில் இவ்வருடத்தில் 306 வீதி நிருமாணத் திட்டங்க 749பில்லியன் ரூபா செலவில்  இரண்டு … Read more

அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு

அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இது தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமித்தல் அரச சேவையில் பல்வேறு ஊழியர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அந்தந்த தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் … Read more

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவ ஏற்பாடுகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் நேற்று (மே 27) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள 212 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் 55406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் … Read more

சாதனை படைத்த இராணுவ பரா தடகள வீர்ர்களுக்கு இராணுவ தளபதியின் பராட்டு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் பணிநிலை சார்ஜன் எச்ஜீ பாலித பண்டார ஆகிய இருவரும் ஜப்பானில் நடைபெற்ற கோப் 2024 பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக, அவர்கள் 27 மே 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் தனது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். … Read more

இராணுவத் தளபதி 17 வது புத்த ரஷ்மி பக்தி கீதாவலிய 2024 ல் பங்குபற்றல்

17 வது ‘புத்த ரஷ்மி பக்தி கீதாவலிய’ கொழும்பு புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) மாலை பிரபல்யமானவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. மதகுருமார்கள், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் திரு. சோமரத்ன விதான பத்திரண, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஷபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ … Read more

காசா சிறுவர் நிதியத்துடன் கைகோர்த்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவிப்பு

மே 31 வரை பங்களிப்பு வழங்க கால அவகாசம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்றுவரை 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அவலநிலை, குறிப்பாக தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக அவர்கள் … Read more

இவ்வாண்டு சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் கொழும்பில்

சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் கொழும்பில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் தெங்குத் தொழிற்துறையில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் குறித்த கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. 2024 ஆம் ஆண்டில் சர்வதேச தெங்கு … Read more

அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச மக்களுக்கு கடற்படை நிவாரண உதவி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகரித்துள்ள அதிக மழை வீழ்ச்சி புத்தளம், மாதம்பே கடுபிடி ஒயா நீர் பாய்வதுடன், ஹேனேபொல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைத் திட்டமிடுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழு 2024 மே 26ஆம் திகதி அப்பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிவாரணக் குழுவினால் தற்போது பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இடம்பெறுகின்றது. புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக வடிந்து சென்று கடுபிடி ஒயாவில் கலக்கும் … Read more

“உறுமய” திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

உறுமய காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆரம்ப முன்னெடுப்பு என ஜனாதிபதி தெரிவிப்பு. “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700 முழு உரிமையுள்ள காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) காலை வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது. “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு … Read more

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதய மற்றும் சிறுநீரக நோய்ப் பிரிவு, ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

கொழும்பிற்கு அடுத்தபடியாக வடக்கிற்கு வலுவான சுகாதார சேவையை வழங்க முடிந்துள்ளது. A9 வீதியில் பலப்படுத்தப்பட்ட இந்த நவீன வைத்தியசாலை கட்டமைப்பு, மருத்துவ சுற்றுலாவிற்கும் பெரும் பங்களிப்பு செய்யும் – ஜனாதிபதி தெரிவிப்பு. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக … Read more