உயர்தர தொழிநுட்பப் பிரிவு மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் … Read more

உலகப் புகழ்பெற்ற வர்த்தக முதலீடுகளை ஈர்ப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். “Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம் நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு இணைய வசதிகளை பிரச்சினையின்றி வழங்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை உட்பட பொருளாதாரத்திற்கு பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு … Read more

மாங்குளம் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் திறந்துவைப்பு

வடக்கு மாகாண சுகாதார துறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில்  நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் நேற்று (26/05/2024) திறந்து வைக்கப்பட்டது.   புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,  பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம், இலங்கைக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் 4,500 மில்லியன் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி  வேலைத் திட்டங்கள் குறித்த விசேட மீளாய்வு கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (27)  இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத்  தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் குறித்த விசேட கலந்துரையாடல்   மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயமாக்கல், உலக வங்கி நிதி அனுசர ணையில் உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி பயிர் செய்கை … Read more

கேப்பாப்பிலவு கிராமத்தில் காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது. ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை என்னவென்று வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை … Read more

புரட்சி இல்லாமல், நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் , வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமை வழங்கப்படுகிறது

புரட்சி இல்லாமல், நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் , வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமை வழங்கப்படுகிறது• வவுனியா வைத்தியசாலை பிரதான வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்படும். • வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம். • பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு சகல வசதிகளுடன் கூடிய நான்கு புதிய சுகாதாரப் பிரிவுகள் • வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கும் துரிதமாக முழுமையான காணி உறுதிப்பத்திரங்கள் – ஜனாதிபதி. புரட்சியின்றி, … Read more

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணம் மேம்படுத்தப்படும்

• மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட … Read more

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 375 புதிய ஆசிரியர் நியமனங்கள்

முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த கல்வி முறையை மீண்டும் உருவாக்க நடவடிக்கை. ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோரிக்கை. கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக … Read more

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்ற வேண்டும் – ஜனாதிபதி 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பழமையான பொருளாதார முறையினால் தான் இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புதிய பொருளாதார முறைமையை உருவாக்குவதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரணைமடு, நெலும் பியச மண்டபத்தில் நேற்று (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் … Read more

சி.வி.விக்னேஸ்வரனின் நலம் விசாரிக்கச் சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்று (25) இரவு சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.