ஜனாதிபதியின் வெற்றி – தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் – கடற்றொழில் அமைச்சர் 

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தியாவோடு ஒரு நெருக்கமான நில தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஓர் அற்புதமான கொள்கையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத் திருக்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரோடு இணைந்து பயணிப்பதன் ஊடாக தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை … Read more

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

2017 ஆம் ஆண்டு நிர்மானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு. ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்ட மூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் … Read more

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில்..

04 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முழு உரிமையுடைய 1700 காணி உறுதிகள் வழங்கப்பட்டன. நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்யும் விவசாயிகளின் நில உரிமையை உறுதி செய்ய முடிந்திருப்பது அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்- ஜனாதிபதி வலியுறுத்தல். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருதிட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்றவகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி இன்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினையைத் தீர்ப்போம்

நவீன விவசாயத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் மாற்றப்படும். காங்கேசன்துறை மற்றும் மாங்குளத்தில் இரண்டு முதலீட்டு வலயங்கள் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு. இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான … Read more

நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் 5,320 மில்லியன் ரூபா இலகு கடன் வசதியின் கீழ், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் … Read more

அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடம்

நேற்று (24) ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் 10.16 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார். யூபுன் ஆரம்பச் சுற்றில் 10.15 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், அது யுபுன் அபேகோனின் தனிப்பட்ட சிறந்த பெறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது    

கொழும்பு நகரில் பல்வேறு வெசாக் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கங்காராம விகாரையின் வருகை தந்த ஜனாதிபதி, அங்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், கங்காராம விகாரையின் விகாராதிகாரி வண, கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், … Read more

யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும்

வடக்கு மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அபிவிருத்தியின் நன்மைகள் அந்த மக்களுக்கும் வழங்கப்படும். வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி … Read more

மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு உருவாக்கப்படும்

தெற்காசியாவில் மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் ஒரே நாடு இலங்கை.வடக்கு மாகாணத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும் – “உறுமய ” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்று தெரிவித்த … Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு தொடர்பாகக் கண்டறிவதற்காக விசேட குழு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கண்டறிந்து, அறிக்கை வழங்குவதற்காக ஜனாதிபதியில் செயலாளரின் தலைமையில் விசேட குழுக்கள் சில நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்று (23) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்றுமதி விவசாயக் கைத்தொழிலைப் பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான பங்களிப்பை வழங்கும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், தோட்டச் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் … Read more