கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

ஒரு தனி சேவையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு நாட்டில் 13,000 இற்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களுக்கு தனியான சம்பள மட்டம் வழங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதற்கிணங்கஇலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சேவையை உருவாக்குவதற்காக அச்சேவை தொடர்பான சட்ட மூலம் அரசாங்க சேவைகள் ஆணை குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை, பாரிய வெற்றி என்றும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட … Read more

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தரம் 5 மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்படும் 2024 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக , பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதற்கிணங்க புலமைப் பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளது. . அதற்காக 2024 மே 27 முதல் 2024 ஜூன் 14 வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் களத்தின் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை இலங்கை அனுப்பி வைக்க முடியும்.

தியவன்னா வெசாக் வலயம் இன்று முதல் நடைபெறவுள்ளது

இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகிவற்றின் பங்களிப்புடன் வெசாக் விளக்குகளை ஏற்றும் நிகழ்வு நாளை மாலை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மிகவும் சிறப்பான பௌத்த கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் டென்சில் … Read more

ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீரர் உலக சாதனை படைத்தார்

ஜப்பானின் கோபி நகரில் நடைபெற்றுவரும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பங்கேற்கும் இலங்கை இராணுவ வாரண்ட் அதிகாரி II K.A சமித துலான் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார். இராணுவ ஊடக தகவல்களின் படி WO II துலான் ஈட்டி எறிதல் F-44 பிரிவில் 66.49 மீ தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார். மேலும் அவர் பாரா ஈட்டி எறிதல் போட்டியில் (F-44/F-64) வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பதும் … Read more

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பு

மட்டக்களப்பில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பிரசவித்துள்ளதாகவும், தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக இன்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாறஞ்ஜினி கணேசலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சோ்ந்த 25 வயதுடைய ஹரிகரன் கிருஷ்ணவேணி என்பவர், வெளிநாட்டில் இருக்கும் போதே கருத்தரித்துள்ளார். அதனால் 8 … Read more

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் வாய்ப்பு

நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 … Read more

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 56 ஆவது ஒசுசல கிளை வெள்ளவத்தையில் திறப்பு

அரசாங்க மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தின் (SPC)  வெள்ளவத்தை அரச மருந்தகமான ஒசுசலவின் மற்றுமொரு கிளை நேற்று (21) பிற்பகல் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரணவின் தலைமையில் திறக்கப்பட்டது. அதற்கிணங்க அரச மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தில் ஒசுசல வலையமைப்பின் 56ஆவது ஒசுசல மருந்தகம் வெள்ளவத்தை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வொசுசல ஊடாக அனுபவமிக்க மருந்தாளர்களின் சேவையை அரச அங்கீகாரத்துடன் உயர் தரத்திலான மருந்துகளை குறைந்த விலையில் நுகர்வோர் கொள்வனவு செய்யலாம் என்பதுடன் சிரேஷ்ட பிரஜைகள், கர்ப்பிணத் தாய்மார்கள் மற்றும் … Read more

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது. ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பை பதிவிட்ட பின்னர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு ஈரான் … Read more

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான விலைகளை நிலையாகப் பேணும் வரி அறவீட்டை அமுல்படுத்துவதற்கு  யோசனை…

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விலைகளை நிலையாகப் பேணும் வரி அறவீட்டை அமுல்படுத்துவதுற்கு அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வரியிலிருந்து மேலதிக இலாபம் கிடைக்குமாயின் ஏனைய முறைகளுக்கு ஊடாக அந்த இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ முன்வைத் வாய் மொழி மூலமான கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காய … Read more

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பம்

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளது. திருவிழாக் காலங்களில் வழமைபோல்  யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பஸ் சேவைகளின் ஒருவழிக் கட்டணம் 187 ரூபா என தீர்மானிக்கப்பட்டது. நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்  … Read more