அரச வெசாக் விழா பிரதமர் தலைமையில் ஆரம்பம்

அதனுடன் இணைந்ததாக தொல்பொருள் கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது அரச வெசாக் விழா மகாசங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (2024.05.21) மாத்தளையில் ஆரம்பமானது. சியாமோபாலி மகா நிகாய பிரிவின் மல்வத்து மகா விகாரையின் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர், ஷியமோபாலி பிரிவின் அஸ்கிரி பிரிவின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி நாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் ரங்கிரி … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் பனிச்சையடியில் மக்கள் பாவனைக்காக வீதி திறந்து வைப்பு

அத்தியாவசிய மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பனிச்சையடியில் – கொக்குவில் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள படித்த பெண்கள் பண்ணை வீதி நேற்று (20)  மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.   5.2 மில்லயன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கிறவல் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு குறித்த வீதியை திறந்து வைத்தார்.   மண்முனை வடக்கு … Read more

மழையுடன் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் 

  மே 26 முதல் தேசிய டெங்கு விழிப்புணர்வு வாரம். மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மே 26 முதல் ஜூன் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரத்தில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை … Read more

இன்று தேசிய துக்க தினமாகப் பிரகடனம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி யின் திடீர் மரணத்தை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் சகல நிறுவனங்களிலும் தேசியக் கொடியை இன்று (21)அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் தெரிவித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. . 

யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்

யானை-மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, ‘தற்காலிக விவசாய மின் வேலி’ மற்றும் ‘கிராம மின் வேலி’ என்ற இரண்டு மாதிரித் திட்டங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காட்டு யானை-மனித மோதல்களை கட்டுப்படுத்த அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இங்கு யானை … Read more

பயிரிடப்படாத நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அவசியமான சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டும் -சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர்

சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். மேலும், சமூக வலுவூட்டலுக்காக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார். … Read more

ஈரான் ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

  மேன்மைதங்கிய முஹம்மத் முக்பர்ஈரான் இஸ்லாமிய குடியரசின் துணை ஜனாதிபதிமேன்மைதங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் பெரிதும் கவலையடைகிறேன். ஈரான் மக்களுக்கும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மறைந்த ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கவையாகும். உண்மையில், மேன்மைதங்கிய இப்ராஹிம் ரைசி அவர்களின் கடைசி வெளிநாட்டுப் பயணமானது, இலங்கை மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் ஈரானின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா நீர் … Read more

மூன்று கூட்டங்கள் ஊடாக காலி மாவட்டத்தின் கருத்துக்களை பெற உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் நடவடிக்கை

இனப்பிரச்சினை மற்றும் போருக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கருத்துப்பரிமாறவும் அது தொடர்பில் கவனம் செலுத்தும் முயற்சியாகவும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) காலி மாவட்டச் செயலகத்தில் அண்மையில் மூன்று கூட்டங்கள் மூலம் பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றது. அரச அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அமைப்புக்கள் வரை பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கீழ்மட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நபர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. நல்லிணக்கச் செயற்பாட்டில் உள்நாட்டு … Read more

“பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” என்பன மே 22 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பதில் நிதி அமைச்சர் 

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய “பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” ஆகியவை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) … Read more

இலங்கை – இந்தோனேசியா வரலாற்று உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி

  இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் வர்த்தக ஒப்பந்தத்தில் (PTA) கைச்சாத்திட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது. இந்தோனேசிய ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ … Read more