காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிக்கும் வேலைத்திட்டத்தில் துரதிஷ்டவசமாக உலக வட துருவ நாடுகள் தோல்வியடைந்துள்ளன

  காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிப்பதற்கான வரி. காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்னையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்தல் உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், உலகளாவிய வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் பணிகளுக்கு நிதியளிக்க பின்வாங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இந்தோனேசியா, பாலி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விலேயே … Read more

கடலட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சரினால் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சியில் பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பிற்கான கடலட்டை பண்ணை  அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (20) வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது 56 பயனாளிகளுக்கான கடலட்டை பண்ணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிராஞ்சியில் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் வெசாக் தினத்திலும் (23ஆம் திகதி) வெசாக் தினத்திற்கு மறுநாளிலும் (24ஆம் திகதி) மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் மே மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள, சில்லறை விற்பனை செய்ய அனுமதி பெற்ற அனத்து மதுபானம் விற்பனை நிலையங்களும் மூடப்பட உள்ளன. இம்முறை 2024ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகை மாத்தளை மாவட்டத்தை மையப்படுத்தி … Read more

நாட்டுக்கு எழுபத்தைந்து ஆண்டு சாபம் இல்லை – நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களின் நாற்பதாண்டு சாபம். – அமைச்சர் மனுஷ நாணயக்கார

“…அப்போது திறந்த பொருளாதாரம் என்று ஒரு வதந்தியை உருவாக்கினார்கள். கல் ஓயா திட்டம் , உமா ஓயா என்று ஒரு பெரிய வதந்தியை உருவாக்கி, ‘IMF’க்கு பெரிய வதந்தியை உருவாக்கினார்கள். 75 ஆண்டுகால சாபத்தால் இந்த நாட்டின் 40 ஆண்டுகால வளர்ச்சி நின்று போனது. வியட்நாமை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை அறிவித்தபோது, சிலர் அதைக் கண்டு சிரித்தனர். நம் நாட்டைப் பார்த்து சிரிக்கிறோம். அதை நாமே ‘பகிர்வு’ செய்யும் போது, அது உலகிற்கு செல்கிறது. … Read more

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி பயணித்த ஹெலிகொப்டர் வடமேல் அஸர்பைஜான் பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அஸர்பைஜான் பிராந்திய நாட்டின் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவுடன் நீர்ப்பாசனத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் ஜனநாயக நாட்டின் செய்தி நிறுவனம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் விபத்தில் பயணிகள் அனைவரும் இறையடி சேர்ந்துவிட்டனர் என்ற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், … Read more

“புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்தாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு

தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், “புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (20) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் ஆலோசனையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பலி

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோர் நேற்று (19) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டு ஊடகங்கள் மற்றும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் என்பனவற்றின் தகவல்கள் அந்த ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளன. விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரில் அஸர்பைஜானிலிருந்து மீண்டும் திரும்பி வந்துகொண்டிருந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர்அப்துல்லாஹியான், ஈரானின் கிழக்கு ஆஜர்பைஜான் மாகாண ஆளுனர் … Read more

நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்… – பிரதீப் யசரத்ன..

எல்லே குணவம்ச நாயக்க தேரரின் ஆலோசனையில், பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்த வருட வெசாக் பண்டிகையை நாடளாவிய ரீதியில் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இவ்வருட வெசாக் பண்டிகையை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவும், அதற்கான ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொழும்பு 07 பௌத்தலோக மாவத்தை தர்மயாதனவில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து … Read more

அசாதாரண காலநிலையால் 3518 குடும்பங்கள் பாதிப்பு

அசாதாரண காலநிலை காரணமாக 6மாவட்டங்களில் 3518 குடும்பங்கள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் பல பல பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றரை அண்மித்ததாக மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் ஏழு மாவட்டங்களுக்கு காணப்படுவதாகவும் நீர் நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதனால் அதனை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை தீவி முழுவதுமான முறையில் நிலை கொள்வதனால் தற்போதைய மழை … Read more

தோட்டத்தொழிலாளர் சமூகத்தை தோட்டங்களில் முடக்கிவிடுவதை விடுத்து விவசாய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அமைப்போம்

நாட்டின் 75 ஆண்டுகால சாபத்தைப் பற்றி தற்பெருமை பேசுபவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், குடிமக்கள் மிகச்சிறிய பதவியில் இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயரும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டமைப்பே இதற்குக் காரணம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதின்நான்காவது கட்டத்தின் முதல் நாள் நிகழ்வை (17 ) நுவரெலியாவில் … Read more