அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையின் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலை திட்டத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை

அரச முகாமைத்துவ உதவியாளர் இச்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற நபர்களுக்கு,பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் (13) இடம்பெற்ற அரசு நிர்வாக உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அரச முகாமை உதவியாளர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளாக 40% வீதம் … Read more

ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் – வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்யாவின் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய … Read more

10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி நாளை மறுதினம் இந்தோனேசியா பயணம்

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (18) இந்தோனேசியா பயணமாகிறார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். “கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்.எச்.எம். அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட … Read more

பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று (15/05/2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. … Read more

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை விஞ்ஞான பாட வினாப்பத்திரத்திற்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்

இம்முறை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப்பாட வினாப்பத்திரத்தில் ஏற்பட்ட தவறுக்காக அனைத்து மாணவர்களுக்கும் 2 புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சநந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விஞ்ஞானப் பாடத்தின் பல்தேர்வு வினாப்பத்திரத்தின் 9வது மற்றும் 39வது வினாக்களுக்காகவே இந்த இரண்டு புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும், குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பாடத்திட்டத்திற்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாக கமூக … Read more

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாண பணிகள்…..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு நேற்று (15/05/2024) அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிலத்தடி நீரினால் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதிகளில் … Read more

நாட்டில் மழை நிலைமை மேலும் தொடரும் : மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, … Read more

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு – ஜனாதிபதி இடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, (Donald Lu) (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் டொனால்ட் லூ பாராட்டினார். இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான … Read more

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்

இராணுவ வீரர்களுக்கு காணி வழங்கும் பணிகளை துரிதப்படுத்த விசேட குழு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன். ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார். ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் … Read more