வடக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க (13 மே 2024) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார். கடற்படை மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார். மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் … Read more

பாரம்பரிய பெருந்தோட்டத் தொழிற்துறைக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத்துறையொன்று நாட்டிற்கு அவசியம்

• புதிய சட்டத்தின் ஊடாக விவசாயத் தொழில் தொடர்பான நிறுவனங்களுக்கு இடையே உள்ள தடைகள் அகற்றப்படும். • தோட்டத் துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவம் அறிமுகப்படுத்தப்படும். • விவசாய ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைவுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் – ஜனாதிபதி. பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய … Read more

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில் வௌியிடப்படும்

• நாடளாவிய ரீதியிலிருக்கு 1220 கொத்தணிப் பாடசாலைகள் மற்றும் அவற்றை கண்காணிக்க 350 சபைகள் உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த. கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்து அதற்குரிய சுற்றுநிருபம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி … Read more

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் 

இலங்கை பிரஜைகள் எந்த காரணத்துக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்வதாயின் அதிலும் தமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டம் காரணமாக செல்வார்களாயின் அதற்கு அரசாங்கமாக முடிந்தவரை நாம் உதவுவோம். அதனால் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது கோரிக்கை இவ்வாறு விடுத்தார். ஆனால் நாம் அனைவரும் இலங்கை பிரஜைகளாக புரிந்து கொள்ள வேண்டும்.சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதை தவிர்ப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு … Read more

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – என வட மாகாண ஆளுநர்

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல, கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) நேற்று நடைபெற்ற போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் தம்மிடம் காணப்படும் நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, உள்ளூர் எழுத்தாளர்களின் … Read more

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் நேற்றைய தினம் (13.05.2024) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

படை வீரர்களுக்கு அரச காணிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி

படைவீரர்களை வசிக்கச் செய்வதற்காக அரச காணிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சேவையில் இருக்கும் போது காணாமல் போன மற்றும் அங்கவீனமுற்று மற்றும் தற்போதும் சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படை வீரர்கள் வசிப்பதற்காக அரச காணிகளை வழங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முறை தொடர்பாக ஆணையாளர் நாயகத்தினால் அமைச்சரவைத் தீர்மானங்களை அடிக்கடி சுற்று நிருபங்களை ஆலோசனைகளாக வெளியிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. தற்போது அங்கே அனுமதிக்கப்பட்டு … Read more

பரீட்சையின் போது சிக்கல்கள் ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு அநீதி ஏற்;படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்

போட்டிப் பரீட்சையொன்றின் போது சிக்கல்கள் ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு அநீதி ஏற்;படாத விதத்தில் புள்ளிகள் வழங்கக்கூடிய நடைமுறையொன்று மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உதாரணமாக, ஏதேனுமொரு நீக்கப்பட்ட பகுதியிலிருந்;து வினாப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்படடிருந்தால், அந்த வினாவிற்கு … Read more

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேர் தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமிப்பு

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேரை தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தகைமை வாய்ந்த அதிகாரிகள் 1,000 பேருக்கு முறையாக தெரிவு செய்யப்பட்ட 03 பிரிவின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அ மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. … Read more

இவ்வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன

ஜனாதிபதித் தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கியவர்களில் சில அரச ஊழியர்களும் உள்ளதால், அவர்கள் பணியில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய விடயங்களில் … Read more