மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட செயலமர்வு

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று(13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை … Read more

உறுமய திட்டத்தினை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்!!

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட … Read more

சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர்நாயகம அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெறும் கணிதப் பாடம் மற்றும் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஏனைய பாடங்களும், நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் தடைகளும் இன்றி நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்;பாக, உரிய அதிகாரிகள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் … Read more

கிழக்கு மாகாண புதிய இராணுவ கட்டளைத் தளபதிக்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்குமிடையில் விசேட சந்தித்திப்பு!!

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதன் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பு இன்று (13) காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதியாக கடந்த ஏப்ரல் மாதம் 25ஆ ந் திகதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க வைபவரிதியாக அரச உயர் அதிகாரிகளை சந்தித்தல் மற்றும் மதஸ்தலங்களை தரிசித்து சமயத் தலைவர்களிடம் ஆசீர் பெற்றுக் … Read more

வெசாக் தினங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக சதொச நிறுவனத்திடமிருந்து சலுகை விலையில் பொருட்கள்

எதிர்வரும் வெசாக் தினங்களை முன்னிட்டு நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக தேவைப்படுகின்ற உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர பதிவு செய்யுமாறு இலங்கை சதொச நிறுவனம் அnறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு

பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளை பேணுவதற்காக மாணவர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கையளிக்கப்பட்டன. இதன் போது மாணவர்களின் பாதுகாப்புக் கருதி 30 நாட்களுக்குள் அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் வேகத் தடைகளை உடனடியாக அமைக்க அனைத்து வீதி அதிகார சபைகளுக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

பச்சிலைப்பள்ளியில் 500 குடும்பத்திற்கு காணி உறுதி வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுக்குரிய காணிகளில் வாழும் சுமார் 500 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் இல்லாத நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாக  காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய தெளிவின்மை  காரணப்படுவதால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அதிகரிகளுடன் … Read more

திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்த மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டிய போதும், ஜே.ஆரை முன்னோக்கி கொண்டு செல்லக்கூட இடமளிக்கவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

திறந்த பொருளாதாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டியது. ஆனால் அந்த பொருளாதாரம் ஜே.ஆர். ஜனாதிபதி ஜயவர்தனவால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் திறந்த பொருளாதாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க்க அனுமதிக்கப்படவில்லை” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதே அனைவரின் முன் உள்ள சவாலாகவும், அந்த சவாலை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துள்ளதாகவும், அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் நேற்று  (11) … Read more

கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்…!

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு கிழக்கு  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் பயணத்திற்கான  சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால்  வழங்கி வைக்கப்பட்டன.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் தொடர்பாக தெளிவான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை..

சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் தொடர்பாக தெளிவான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சிம்பலா பிட்டிய தெரிவித்தார். சகல சிரேஷ்ட பிரஜைகளின்  சேமிப்பிற்காக வருடாந்தம் 80 பில்லியன் ரூபா வரையான நிதி தேவைப்படுவதாகவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அளவிற்காக திறைசேரிக்கு   105 பில்லியன் ரூபாய் கடன் வழங்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பாக உணர்வு பூர்வமாகவும் ஆர்வத்துடனும் செயற்படுவதாகவும் பல்வேறு வயது மட்டங்கள் … Read more