மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்  மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரயம்பதி, கோரைத்தீவுப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்  செயலாளர், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுடன் அங்கு காணப்படும் அவசர தேவைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார். வைத்திய சாலைகளில் காணப்படும் பிரச்சினைகளை கேட்டறிந்த … Read more

வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை, நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்தியா பெங்களுரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மே 18 முதல் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் குருஜி நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்துக்கும் வருகை தரவுள்ளார். இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி குருஜிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். … Read more

செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சிப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்

• அதற்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் – ஜனாதிபதி. புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக … Read more

'DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு’ தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் DIGIECON-2023 திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு – 2024 (DIGIECON Global Investment Summit) என்பது இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாகும் என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இந்த மாநாட்டின் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் தகவல் தொழிநுட்ப துறையின் ஊடாக நாட்டின் … Read more

2024 இறுதிக்குள் மூன்று பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர முடியும் – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 03 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாட்டின் முதலீட்டுச் சூழல் தற்போது 200% மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய … Read more

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  நேற்று (10.05.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள், உலக உணவுத்திட்டம்,  காணி உரித்து சான்றிதழ்கள் வழங்குதல்,நலன்புரி நன்மைகள் (அஸ்வெஸ்சும), குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையிலான சூரியகல அடுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுகாதார நிலையம் திறந்து வைப்பு

மூதூர் சுகாதார வைத்திய பிரிவிலுள்ள மூதூர் – பெரியபாலம் கிராமிய சுகாதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு (09) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல ,  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொஸ்தா ,பிரதி பிராந்திய சுகாதார … Read more

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்

• பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலுக்கான தேசிய கொள்கை. • பெண்களுக்காக தேசிய ஆணைக்குழு. • பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை. • பெண்கள் உரிமை மீறப்படும்போது வழக்குத் தாக்கல் செய்யும் வாய்ப்பு. • 2030 ஆகும்போது பெண்கள் அரசியல் கட்சியொன்றை அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் – ஜனாதிபதி. பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை … Read more

‘வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024’ ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024”ஐ (Housing & Construction International Expo – 2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார். ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நிர்மாணத்துறை நிறுவனங்களின் 300 விற்பனை கூடங்கள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் … Read more

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக மொஹமட் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் இன்று (மே 10) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் (தேசியப் பட்டியல்) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024ஆம் ஆண்டு மே மாதம் 08ஆம் திகதி … Read more