எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும்; அதிகளவான தொகை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதேவேளை ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பாக தெரிவிக்கையில் ,இன்று அல்லது … Read more

பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காமல் போகும் என்பதினால் , ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் கூறினார். நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் மூன்று மாதங்களில் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்க … Read more

தமிழக மனிதாபிமான உதவி நிவாரணப் பொருட்கள் நாளை இலங்கைக்கு

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் தமிழ்நாட்டின் மனிதாபிமான உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிய முதலாவது கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணிப்புரைக்கமைய, இலங்கைக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்பதாயிரம் , 200 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என்பன அடங்கியுள்ளன. இந்த அத்தியாவசிய பொருடகள் சென்னை துறைமுகத்தில் கடந்த மே 18 ஆம் திகதி தமிழக முதல்வர் திரு … Read more

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022மே 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன்.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை … Read more

திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமை பாராட்டத்தக்கது – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமை பாராட்டத்தக்கது என்று காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர் தரப்பில் இருந்த போதிலும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக  கூறினார். நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையில் கட்சி அரசியலா அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வா அவசியம் என சகல அரசியல் … Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான செலவுகள் குறித்து 2022 மே 20ஆந் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, செலவீனங்களைக் குறைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பல்வேநு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை ஆகியன உள்ளடங்கும். இதன் விளைவாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2021ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த வரவு செலவுத் … Read more

மட்டக்களப்பில் டெங்கு: இருவர் உயிரிழப்பு

டெங்கு நோயால் இரு இளம் குடும்பஸ்தர்கள் ,மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் நேற்றுவரை சுமார் 240 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதனிடையே, நாட்டில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட மட்டக்களப்புமாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நேற்று முன்தினம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் … Read more

மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ,அதிகாரிகள் அடுத்த வாரம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அடுத்தவாரம் அழைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், 1969ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.08ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் … Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவிகளை வழங்க இலங்கைக்கு ஐப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவிகளை வழங்க இலங்கைக்கு ஐப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி