கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிப் பாடநெறி மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

ஒறுகொடவத்த இலங்கை – கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன், இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள் மற்றும் நிறுவனத்தில் காணப்படும் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிப்பை வழங்குவதற்கு கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. மேலும், 16 மாதகாலம் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் கீழ், மோட்டார் வாகன தொழிநுட்பம், உற்பத்தித் தொழிநுட்பம் – CNC, உருக்கு ஒட்டுத் தொழிநுட்பம், … Read more

இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அதிமேதகு Dewi Gustina Tobing நேற்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது. மேலும், இராணுவப் பயிற்சி மூலோபாய கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட … Read more

T20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா பயணம்

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை மகளிர் அணியினர் கடந்த 23ஆம் திகதி தென் ஆபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளனர். சமரி அத்தபத்து தலைமையிலான இந்த அணியில் 17 வீராங்கணைகள் உள்ளனர். தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணிக்கு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அனுமதியை வழங்கினார். இந்த போட்டியில் மூன்றுT20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கும். இங்கு நடைபெறும் … Read more

தேர்தல் திருத்தங்கள் மூலம் எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது..

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே … Read more

சீனாவில் நடைபெறும் போவா வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று மாலை சீனத் தலைநகர் பீஜிங் பயணமானார். பீஜிங்கில் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சியின் (CPC) உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். ஹைனானில் உள்ள போவாவில் நடைபெறும் சீனாவின் முதன்மையான இந்த வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் பிரதம … Read more

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைவரும் ஆட்டமிழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 16 ஓவர்களில் முதல் 5 விக்கெட்டுகள் வீழ்ந்த போது, தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 102 ஓட்டங்களைப் பெற்று தமது அணியின் முதல் இன்னிங்ஸை கௌரவமான நிலைக்கு உயர்த்தினர். பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைவரும் ஆட்டமிழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி … Read more

ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான தலைமுறையொன்றை உருவாக்க பாடசாலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டுமாயின் , பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பாடசாலைக் கல்வியில். பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது – ஜனாதிபதி. நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட … Read more

யாழ். விவசாயிகளுக்கு 235 ஏக்கர் காணி கையளிப்பு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 235 ஏக்கர் காணியை 2024 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது இலங்கை இராணுவம் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ … Read more

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

• எந்த இனத்தவராக இருந்தாலும் அனைத்து பிரஜைகளுக்கும் சட்டரீதியான காணி உரிமை கிடைக்க வேண்டும். • வடக்கின் விவசாயத்தில் நவோதயம். • வடக்கில் நாட்டில் பிரதான பொருளாதாரத்தை கட்டமைக்க ஒன்றுபட்டுச் செயற்படுவோம் – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு. காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து … Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 25 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 25 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியும் காணப்படுகின்றது. … Read more