ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் அனைத்து … Read more

இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும்

• இந்தியாவும் இலங்கையும் இணைந்து வெளியிட்ட ” தொலைநோக்கு அறிக்கை”யை தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம் – ஜனாதிபதி. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியச் சங்கம் (Sri Lanka India Society) (14) கொழும்பில் ஏற்பாடு … Read more

2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த

வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் இன்னும் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் முன்னோக்கிச் சென்றால், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (15) … Read more

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைகளை வழங்குக

• அஸ்வெசும நலன்புரிக்காக 183 பில்லியன் ரூபாய். • உருமய காணி உறுதிகளை வழங்குவதற்காக 2 பில்லியன் ரூபாய். • பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 11,250 மில்லியன் ரூபாய். • “கந்துகர தசகய” வேலைத் திட்டத்திற்கு 10 பில்லியன் ரூபாய். • விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு 2,500 மில்லியன் ரூபாய். • அனைத்து பிரதேச செயலகத்திலும் நவீன விவசாயப் பொருளாதாரம் உருவாக்கப்படும். • தொழிற்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் திட்டம் – மாவட்ட செயலாளர்கள் மற்றும் … Read more

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிற்துறையில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் அவதானம்

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வரிக் கொள்கையில் தற்போதைக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும், ஆனால் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான முறைமையொன்று தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகளைத் தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இரத்தினக்கல் … Read more

கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிலைபேறான கடல் மற்றும் … Read more

கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்

ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தென்பகுதிக்குத் தனித்துவமான இடம் உள்ளது என்றும் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். காலி, ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை (13) பிற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்விலேயே … Read more

நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்!

தெங்குக் கைத்தொழிலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள். நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அப்பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்க இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (13) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றின் செயலாளர்களை உள்ளடக்கி, துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த … Read more

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 107 புதிய சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன

சிறைக் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது – நீதித்துறை மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் இராஜாங்க … Read more

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவிற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க 50 கோடி ரூபா வழங்கப்படும்…

நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 50 கோடி ரூபா நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (13) தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதற்கென இன்று (15) முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது தலா இரண்டு நெல் களஞ்சியசாலைகள் வீதம் நெற் கொள்வனவிற்காகத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முறைப் பெரும் போகத்தில் நெற் கொள்வனவிற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி கோரி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தாலும், நிதி அமைச்சின் அதிகாரிகள் … Read more