‘Celebration of women’ மற்றும்’தியானத்தின் அமைதி’ ஓவியக் கண்காட்சிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (14) பிற்பகல் கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன மற்றும் வின்ஸ்டன் சுலுதாகொட ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார். இரோமி விஜேவர்தன அவர்களின் கலை வாழ்க்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு’Celebration of women’ எனும் தொனிப்பொருளில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஓவியக் கண்காட்சிகளை நடாத்தும் வின்ஸ்டன் சுலுதாகொட தனது 34 ஆவது ஓவியக் கண்காட்சியை … Read more

“மக்கள் போராட்டத்தின் எதிரொலி” என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட “மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய … Read more

இறால் பண்ணையாளர்களுக்கு கிழக்கு மாகாண காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணைத் திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கொண்டார். இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டூனா மீனுக்கு நிர்ணய விலை மற்றும் முறையான கொள்கைத் திட்டம் அவசியம்

டூனா மீனுக்கு நிர்ணய விலை மற்றும் முறையான கொள்கைத் திட்டம் அவசியம் என்று பலநாள் படகு உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநத்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சில் (13ம் திகதி) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துiயாடலின் போதே அவர்கள் இவ்வாறு … Read more

மார்ச் 19ஆம் திகதி முதல் தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவுத் திறன் தரம் 8 எட்டிலிருந்து கற்பிக்கப்படும்…

கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் போது நவீன தொழில்நுட்பத் திறனை பிள்ளைகளுக்கு வழங்குதல் அத்தியவசியமென்றும், விசேடமாக நெநோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் திறன் போன்ற பாடங்களை குறுகிய காலத்தினுள் கல்விப் பொறிமுறைக்கு அறிமுகப்படுத்தும் இச்சவாலிற்கு நாம் ஏதோ ஒரு விதத்தில் முகங்கொடுக்க வேண்டும், எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்காலத் தொழில் உலகிற்கு எமது பிள்ளைகளை தயார்படுத்தாதிருக்க முடியாது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கல்கிஸ்ஸ பெண்கள் உயர்தரப் பாடசாலையின் … Read more

அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு… – பிரதமர் தினேஷ் குணவர்தன.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்.. கடந்த (2024.03.12) புத்தளம், முந்தலம் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் அரச திணைக்களங்களும் வழங்க வேண்டிய சேவைகளுக்கு பிரதேச செயலகங்களே முதலிடம் வகிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிதாக பிரகடனப்படுத்தியுள்ள அபிவிருத்திச் செயற்பாட்டின் ஒரு … Read more

சீன அரசினால் சிறப்பு வெடிகுண்டுகளை அகற்றும் கருவி இராணுவத்திற்கு வழங்கப்பட்டது

சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை இலங்கை இராணுவத்தினர் நேற்று (மார்ச் 13) சீன மக்கள் குடியரசின் தூதுவர் மேன்மைதாங்கிய கியூ சென்கொங் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ … Read more

யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான செயலமர்வு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமயக வளாகத்தில் 11 மார்ச் 2024 அன்று பேராசிரியர் டேவிட் பரூஸ்டர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் அமந்தா ஜான்ஸ்டன், மற்றும் அவுஸ்திரேலிய கடற்படையின் பெட்டர்மேன் கெப்டன் சைமன் ஆகியோருடன் இணைந்து ஒரு நாள் பயிற்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘தற்கால உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள்’ என்ற தொனிப்பொருளில் இந்த செயலமர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ … Read more

ஜேர்மன் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கௌரவ ரினாடே குனாஸ்ட் தலைமையிலான தெற்காசியாவுக்கான ஜேர்மன் பாராமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு ஜேர்மன் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை நினைவுகூர்ந்த சபாநாயகர், இதன் ஊடாகப் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்!!

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவித்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நீர்ப்பாசன அமைச்சின் காலநிலை மாற்றத்தை எதிர் நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் வவுணதீவு முல்லாமுனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் நேற்று (13) உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. உன்னிச்சை நீர்ப்பாசன வலது கரை … Read more