பாசிக்குடாவில் “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” வேலைத் திட்டம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல்

பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் இரண்டாவது சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில்  (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சது விக்ரமசிங்க “புளு பிளேக் பீச்” வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார். மட்டக்களப்பு … Read more

இ. போ. சுபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாயின் 1958இற்கு அழைப்பை ஏற்படுத்தவும்..

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பவர்களுக்கு அல்லது யாரேனும் நபருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் 365 நாட்களும் எந்த ஒரு நேரத்திலும் 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் … Read more

“உறுமய” காணி உரிமையைப் பெறுவதற்காகப் பதிவு செய்ய அவசரத் தொலைபேசி இலக்கம் (Hotline)

“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான … Read more

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது

• மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவசியமில்லை. • இந்த ஆண்டு நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் ஜீவன் தொண்டமான். மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் … Read more

கோள்மண்டலம் இன்று முதல் மார்ச் 12ம் திகதி வரை மூடப்படும்

இன்று (27) முதல் மார்ச் 12 ஆம் திகதி வரை இலங்கை கோள்மண்டலத்தை, பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் கோள்மண்டலத்தின், ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (27.02.2024) முதல் 12.03.2024 வரை பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சாரக் கட்டணத்தை ஆகக்குறைந்தது 20% ஆவது குறைக்க வேண்டும்

தற்போதைய மின்சாரக் கட்டணத்தை ஆகக்குறைந்தது 20% ஆவது குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை ? துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப்பெறும் போது உரிய மின்சாரக் கட்டண நிலுவையைத் தவணை அடிப்படையில் செலுத்துவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்கவும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவக்கு அறிவுறுத்தல் ? வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அரசாங்கத் துறையின் மின்சாரப் பாவனை தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளவும் பரிந்துரை ? … Read more

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (26) பிற்பகல் தேசபந்து தென்னகோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

• மேற்கு மற்றும் கிழக்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தெரிவிப்பு. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்திப் பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான … Read more

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வருடத்திற்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்”

• 3600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த … Read more

நீதி அமைச்சரினால் மாவட்ட மட்ட ஆலோசகர் சபைக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!!

நீதி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் “சகவாழ்வு சங்கங்களை நிறுவி வருகின்றது. அதன்  அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கான மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைக்கும் நிகழ்வும், அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் (24) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் … Read more