ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான் வௌிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தினார். அந்த சமாதான ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக இருக்க கூடாதெனவும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் ஏற்படுத்திகொள்ளப்பட … Read more

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் (20) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளீதரனின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது மாவட்ட செயலகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவின் மேற்பார்வையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குப் பொதிகளுக்காக வழங்கப்படும் கூப்பன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி” ஊக்குவிப்பு … Read more

T20 மூன்றாவதும் மற்றும் இறுதியுமான போட்டி இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் இடம்பெறுகின்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (21) நடைபெற உள்ளது. அதற்கமைய இன்றைய போட்டி, ரங்கிரி தம்புலு விளையாட்டு மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடரை, 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

பத்தாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் போலியானவை…

பத்தாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் போலியானவை என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றைய (20) தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்தார். அத்துடன், பத்தாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் போலியானவை என சுட்டிக்காட்டி அமைச்சர், அதன் உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்தினார். இந்த வீட்டுத் … Read more

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை…

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (20.02.2024) அலரி மாளிகையில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மேலதிக மின்சாரத்தினை சேர்க்கும் உமா ஓயா நீர்மின் திட்டத்திற்கு ஈரான் அளித்த ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். உமா ஓயா திட்டம் மின்சாரத்தை உற்பத்தி … Read more

பாராளுமன்றம் இன்று முதல் மூன்று நாட்கள் கூடவுள்ளது

• நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் பெப்ரவரி 21ஆம் திகதி • மறைந்த இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிஷாந்த குறித்த அனுதாபப் பிரேரணை பெப்ரவரி 22ஆம் திகதி பாராளுமன்றத்தை இன்று 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை மூன்று நாட்கள் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பதவியணித் தலைமை … Read more

பாரத் – லங்கா பத்தாயிரம் வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண விழா..

இந்தியாவின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரத் – லங்கா பத்தாயிரம் வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண விழா, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கௌரவ. சந்தோஷ் ஜாவின் பங்கேற்புடன் நேற்று (19) நடைபெற்றது. பத்தாயிரம் வீடுகளில் முதற்கட்டமாக 1300 வீடுகள் நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 பெருந்தோட்டங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. அங்குரார்ப்பண விழாவின் … Read more

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் வழி பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிக்க அமைச்சரவை அங்கீகாரம்..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் வழியான பயணிகள் போக்குவரத்தை ஊக்குவித்தல் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு…   … Read more

ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..

ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின் கொழும்பு நம்பிக்கைப் பொறுப்புக்கு வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே … Read more

ரயில்வே காணிகளை மிகவும் பயனுடையதாகவும், வினைத்திறனுடையதாகவும் பயன்படுத்த 'Station Plaza' திட்டம்

அரச சொத்துக்களை பலவந்தமாக சுவீகரிப்பது தொடர்பில் பொலிஸாரும் புகையிரத திணைக்களமும் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதாகவும், அதற்கிணங்க ரயில்வே கட்டளைச் சட்டத்தின்படி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை தரைமட்டமாக்கும் உரிமை புகையிரத திணைக்களத்திற்கு உண்டு என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி பகிர்வு தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய … Read more