ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்க்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இம்முறை காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வானது பள்ளிவாசல் சம்மேளனம்,வர்த்தக சம்மேளனம் ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களுடன் இணைந்து இந்நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலில் பி.ப 4.00 மணிக்குப் பின்னர் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலில் பி.ப 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் … Read more

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புக்கள் அரசியல் ரீதியில் பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்

நாளை பற்றிய சிந்தனையுடன் ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்- சாகல ரத்நாயக்க. நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட நாட்டுக்குத் தேவையான பல பொருளாதார மறுசீரமைப்புகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியாக பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த காலங்களில் தேர்தலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களே … Read more

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான முதலாம் தவணை நாளை (19) ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த 16 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 2023ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் தகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், கொவிட் தொற்று பரவல் காரணமாக மாற்றமடைந்த பாடசாலை … Read more

தெற்கு கரையோரங்களில் புத்துயிர்பெறும் சுற்றுலாத் தொழில்துறை தொடர்பில் ஆராய ஜனாதிபதி தங்காலை – காலிக்கு பிரதேசங்களுக்கு நேரடி விஜயம்

நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) தங்கல்ல முதல் காலி வரையுள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார். இதன்போது சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதன்போது சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளைத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்த … Read more

கலப்பு நிலைபேறான நிதி முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை தொடர்பான கலந்துரையாடல்

கலப்பு நிலைபேறான அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியம் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நிதி அமைச்சில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தரவு ஆய்வு, சந்தர்ப்பம், வழி மற்றும் ஊடுருவல் போன்றவற்றிற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்காக டிஜிட்டல் தளம் மற்றும் வலையமைப்பு அபிவிருத்தி போன்றவற்றிற்காக ஆதரவு ஊக்குவிப்புத் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. கலப்பு நிதி விருத்தி, பொது – தனியார் ஒத்துழைப்புடன் சர்வதேச வாய்ப்புக்கள் பயன்பாட்டிற்காக திறன் விருத்தி மற்றும் வலையமைப்பேற்படுத்தளுக்காக முறையான அணுகுமுறையை … Read more

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டார். அங்கு மாவட்ட அபிவிருத்தி சார் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் நீர்வழங்கல் விவகாரம் சம்பந்தமாகவும் கருத்தாடல்கள் இடம்பெற்றன. இதன்போது, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அமைச்சர்; தெளிவுபடுத்தினார். … Read more

ரன்விமன வீடு பயனாளியிடம் கையளிப்பு!!

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் குருமண்வெளி -11, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரன்விமன வீடு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களினால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை சமூக ரீதியாக மேலுயர்த்துவது மற்றும் வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2023ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ரன்விமன வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் திருமதி.கருணாகரமூர்த்தி ராதிகா அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 750,000/= வழங்கப்பட்டிருந்ததோடு, பயனாளியின் பங்களிப்பாக … Read more

யாழ். மாவட்டத்தின் நடப்பு ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (16) நடைபெற்றது. இக் கூட்டத் தொடரில் குறிப்பாக நடப்பு ஆண்டுக்காக மாவட்டத்தில் இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 838  அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் … Read more

யாழ் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்தார்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்துள்ளார். அங்கு அவர்களின் சுகநலம் பற்றி விசாரித்துள்ளதுடன், விரைவில் நாடு திரும்பக்கூடிய சூழல் உருவாகும் எனவும் அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறித்த மீனவர்களின் விடுதலை சம்பந்தமாக நீதி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் இந்திய தூதுவர் ஆகியோருடன் தான் கலந்துரையாடல் நடத்தியுள்ளேன் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. மீனவர் பிரச்சினையென்பது இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையாகும், … Read more