மன்னார் மாவட்டத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

மாவட்ட ரீதியான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்வு இவ்வருடத்திற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனேகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சூகாதர் சூமஸ்தான் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்போடு நேற்று (16.02.2024) மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பு வருடத்துக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ #காதர் #மஸ்தான் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன்,சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் பங்கேற்போடு நேற்று (16.02.2024) முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் NHDA … Read more

தாளையடி குடிநீர் திட்டம் ஊடாக வடக்கில் சுமார் 3 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர்

தாளையடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் உவர்நீர் குடிநீர் செயற்றிட்டத்தை பார்வையிடுவதற்காக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (16) அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு நேரில் சென்ற அமைச்சர், பொறியியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இத்திட்டத்தை விரைவில் நிறைவுசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தாளையடி குடிநீர் திட்டம் ஊடாக வடக்கில் சுமார் 3 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறும் … Read more

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளர்களுடன் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (16) இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக இதன் போது முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றை … Read more

நியாயமற்ற தொழிற்சங்க செயற்பாடுகளைக் கண்டிக்கிறோம்

 மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என பகிரங்க மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார். அத்துடன், மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் … Read more

11 புரதான தலங்கள் புனித பூமிகயாக அறிவிப்பு

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதற்கமைய அனுராதபுரம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலக பிரிவின் அம்பகஸ்வெவ புராதன விகாரை, புத்தளம் தங்கொட்டுவ பிரதேச செயலக பிரிவின் பொதுவடன புராதன விகாரை, அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் … Read more

ஜனாதிபதிக்கும் இஸ்ரேல் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பலஸ்தீன அரசை அமைக்க இலங்கை ஆதரவளிக்கும் – இஸ்ரேல் அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev)ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் … Read more

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் வீடுகள் கையளிப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர்,திருக்கோவில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆளுநர் செந்தில் … Read more

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் “இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்” நிகழ்வு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் “இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்” எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு (15) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ், அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் ,நானாட்டான் … Read more

இலங்கை இராணுவத்தின் 243 வது படைப்பிரிவினால் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை அழகு படுத்தும் செயற்திட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் 243 படைப்பிரிவினால் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை அழகு படுத்தும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்கவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் புராதன ஒல்லாந்தர் கோட்டையினை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருவதனால் சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்துவரும் நிலையில் இக்கோட்டையை அழகு படுத்தி சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்ப்பதற்காக இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 243 … Read more