அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

மார்ச் 15க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணை குறிப்பிடுவது கட்டாயம். முதல் கட்டத்தில் தகுதி பெறாதவர்களுக்கு தகவல்களை மீள் சான்றுபடுத்த விரைவில் வாய்ப்பு. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் … Read more

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து

கொள்கலன் கப்பல் போக்குவரத்து 32% அதிகரித்துள்ளது -அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா. இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் … Read more

மஹா கனதாரவ குளத்தை அண்மித்த விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

அனைத்து சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் – ஜனாதிபதி. அனுராதபுரம் நீர் திட்டத்தினால் விவசாயத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைசாத்திடத் தயார் – சசீந்திர ராஜபக்‌ஷ. பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வீதிகளில் தேட முடியாது. பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும்- துமிந்த திசாநாயக்க. எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சில அரசியல் குழுக்களே தலைமைத்துவம் வழங்குகின்றன – முன்னாள் மாகாண அமைச்சர் எச்.பீ.சேமசிங்க. விவசாயிகளுக்காக பெருமளவான பணிகளை ஆற்றிய ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – மஹா கனதராவ … Read more

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற் கட்டம் ஜனாதிபதியால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். வட. மத்திய மாகாணத்தை வலுசக்தி மையமாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 1917 ரஷ்யப் புரட்சியில் லெனின் கம்யூனிசம் பற்றி பேசவில்லை. அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்டாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அந்த வேலைத்திட்டத்தினால் விவசாய தேவைகளுக்கும், குடிநீர் தேவைகளுக்கும் தீர்வு கிடைக்குமெனவும் தெரிவித்த ஜனாதிபதி அதுகுறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தினார். … Read more

அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை- உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன். கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு … Read more

பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்கு கடன் திட்டமொன்று அறிமுகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக “மடபன” கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின் பொதுமக்கள் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் … Read more

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் Navya Singls (First Secretary, High Commission of India) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (15) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் ஊடகத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.    

அஸ்வசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் இன்று முதல் ஆரம்பம்..

அஸ்வசும நலன்புரி; நன்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை எந்த மட்டத்தில் உள்ள எவரும் சமர்ப்பிக்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நலன்புரிப் பலன்களை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு உட்பட்டு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு சலுகைகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் முறையின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் சமமாகப் பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதன்படி, அவர்கள் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப தகுதித்தேர்வு நடத்தப்படும் என்றார். இந்நிவாரணத் திட்டத்திற்கு மாகாண சபைப் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்காக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் … Read more

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை நாளை முடிவடைகிறது

2023 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், 2024 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் 19-02-2024 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்;டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தை சந்திக்கிறார்

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் Navya Singls (First Secretary, High Commission of India) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (15) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் ஊடகத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.