கல்வி வௌ்ளை அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு சிறப்பான கல்வி முறையொன்று கிடைக்கும் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ள முயற்சித்த மாற்றத்தை முழுமையாக செய்ய முடியுமானால், நாட்டுக்கு சிறப்பான கல்வி முறைமையொன்று கிடைக்குமென ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். மொனராகலை புதுருவகல மகா வித்தியாலயத்திற்கு இசைக் கருவிகளைப் பெற்றுக்கொடுக்கும் (09) நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் … Read more

பிரஜைகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தனிப்பட்ட தரவுகளை தயாரிக்க விரைவில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்

தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் என தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார். இதன் ஊடாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் … Read more

தேர்தல் நடாத்துவது குறித்து விசேட அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறைக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகையிரத சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரங்களை விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு

புகையிரத சேவை தொடர்பில் பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் வெறுப்பூட்டும் பிரசாரங்கள் பரப்பப்படுவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஏதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கின்ற ரயில்வே பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே … Read more

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு திட்டம் – அமைச்சரவைப் பேச்சாளர்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அண்மையில் மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் … Read more

இலங்கையின் எகிப்து தூதுவர் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

கண்டி நகருக்கு சுற்றுலாவொன்றை மேற்கொண்டுள்ள இலங்கையின் எகிப்து நாட்டிற்கான தூதுவர் மெஜித் மோஸ்லேஹ் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே இடையேயான சந்திப்பு ஆளுநரின் அலுவலகத்தில் (12) இடம்பெற்றது இதன்போது இலங்கை மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் சமய உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தூதுவரின் கண்டி மாநகருக்கான சுற்றுலாவை நினைவு படுத்தும் விதமாக நினைவுப் பரிசில்கள் பரிமாறப்பட்டதுடன், இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனரின் செயலாளர் மஞ்சுளா மடகபொல வும் … Read more

டிஜிட்டல் கட்டண முறை மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பல்வேறு நன்மைகள்

தனது வங்கிக் கணக்குள்ள வங்கியுடன் வர்த்தக இணக்கப்பாட்டுக்கு வந்த பிறகு, வர்த்தகம் தொடர்பான QR குறியீட்டை எளிதாகப் பெறலாம் – மத்திய வங்கியின் பணிப்பாளர் (கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள்) வசந்த அல்விஸ். இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த கட்டண முறை அல்லது UPI அறிமுகப்படுத்திய பின்னர் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது. NPCI International Payments Limited … Read more

இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தைத் தவிர மாற்று முறை இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத் திட்டத்தைத் தவிர்த்து வேறு மாற்று வழிகள் இருப்பின் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவு இல்லாத குழுக்கள் மக்கள் முன்னிலையில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது வெறும் வார்த்தைகளால் முடியாத செயல் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி … Read more

இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி!

இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் தனித்துவமான சந்தர்ப்பம். இதன் மூலம் இந்நாட்டிலுள்ள 04 இலட்சம் வர்த்தகர்கள் பயனடைவர். இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் “ தொலைநோக்கு அறிக்கை” தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி. இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்தும் … Read more

தரம் 6 இல் சேர்வதற்கான மேன்முறையீடுகளை நாளை முதல் இணையவழி ஊடாக விண்ணப்பினக்க முடியும்

கடந்த வருடம் (2023) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு தரம் 6 இல் சேர்வதற்கான மேல்முறையீடுகளை 2024. 02. 13 ஆம் திகதி முதல் 2024. 02. 29 வரை இணையவழி ஊடாக மாணவர்கள் சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக பிரவேசித்து அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், http://g6application.moe.gov.lk ஊடாக நேரடியாக மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும்.