ஆண்களைவிடப் பெண்களின் பங்களிப்புக் குறைவாக இருப்பதால் வரவுசெலவுத்திட்ட செயல்முறையில் பாலினக் கண்ணோட்டமும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

இலங்கையின் முறைசார் ஊழியர் படையணியில் பாரம்பரியாமாக ஆண்களைவிடப் பெண்களின் பங்களிப்புக் குறைவாக இருப்பதால் வரவுசெலவுத்திட்ட செயல்முறையில் பாலினக் கண்ணோட்டமும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல மற்றும் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே ஆகியோரின் தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் உத்தேச பாலினக் கண்ணோட்டத்திலான வரவுசெலவுத்திட்ட … Read more

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR கட்டண முறை

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு மூலம் Unified Payments Interface (UPI) மூலம் பணம் செலுத்தும் முறை சில நிமிடங்களுக்கு முன்னர், ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டது. NPCI International Payments Limited மற்றும் LankaPay (pvt) ltd உடன் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 10,000 விற்பனை நிலையங்களில் இந்த கட்டண முறையை செயல்படுத்துவதுடன், இதனை மேலும் விரிவுபடுத்தி 2024 மார்ச் மாதத்திற்குள் இந்த விற்பனை நிலையங்கள் 65,000 ஆக … Read more

யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (09.02.2024) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், கிருமிநாசினி பாவனை, நெல் உற்பத்தி மற்றும் நெல் அழிவுகள், சிறுதானிய ஊக்குவிப்புகள், பழமர உற்பத்திகள், காப்புறுதி நடவடிக்கைகள், நன்நீர் மீன் உற்பத்தி, பனம் விதைகளை நாட்டுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. இக் கலந்துரையாடலில் … Read more

155 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (11) நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலாவது துடுப்பெடுத்தாடினார். அவர்கள் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 308 ஓட்டங்களைப் பெற்றனர். இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய அணித்த தலைவர் குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 52 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 50 … Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ … Read more

சிறு குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புலன் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஜனாதிபதியின் ஆலோசனையில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி

ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியில் இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் வறிய பெற்றோர்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வட கொழும்பு பொது வைத்தியசாலையில் (ராகம போதனா வைத்தியசாலை) மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் (16 வயதிற்குட்பட்ட) கல்லீரல் மாற்று … Read more

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கொழும்பில் கலந்துரையாடல்

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் சட்டம் தொடர்பான பேராசிரியை சாவித்ரி குணசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரதானி கலாநிதி சி.வை.தங்கராஜாவின் உதவியுடன் அதன் … Read more

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜனாதிபதி

தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக இன்று (11) காலை கடுகம்பலையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க .முன்னாள் அமைச்சரின் நலன் பற்றி விசாரித்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாடலில் ஈடுபட்டார். குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பற்றிய தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி , காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டிற்கு அருகில் ஒன்று கூடிய பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.   முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், … Read more

ஜனாதிபதி மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு கண்காணிப்பு விஜயம்

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று(10) விஜயம் செய்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான பங்களிப்பு குறித்தும் … Read more

மறுசீரமைக்கப்பட்ட இருநூறு பஸ் வண்டிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகின்றன.

சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் (2024.02.09) பாராளுமன்ற வளாகத்தை அண்டிய ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவுக்கு ஏற்ப இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதிலும் உள்ள 107 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் 11 பிராந்திய வேலைத்தளங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் … Read more