பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. இச்சந்திப்பில், பிரதமர் செயலாளர், அரச அதிகாரிகள், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி 10 பேர்ச்சஸ் காணி … Read more

கேர்ணல் திலிப சேரசிங்க எழுதிய புத்தக வெளியிட்டு விழா..

இராணுவ பொலிஸ் படையணியின் கேர்ணல் திலிப சேரசிங்க அவர்களினால் எழுப்பட்ட ‘யுக யுக’ எனும் புத்தக வெளியிட்டு விழா (பெப்ரவரி. 9) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நூல் கிமு 103 ஆம் ஆண்டு வலகம்பா வம்சத்தின் காலத்தில் நடந்த புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியின் உரையை ஆற்றிய பாதுகாப்புச் செயலாளர், … Read more

புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதை திருத்தப்பணிகளுக்காக நாளை காலை வரை மூடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையின் புதிய களனி பாலத்திலிருந்து துறைமுகத்தை நோக்கிய பாதையில் நாளை (12) அதிகாலை 05.00 மணி வரை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டுநாயக்காவிலிருந்து களனி பாலம் வரையான பாதை மாத்திரமே மேற்படி தினங்களில் மூடப்படும் என்றும், துறைமுகத்திற்கு பிரவேசித்து செல்லும் பாதையும், ஒருகுடவத்தை சந்தியிலிருந்து களனி பாலத்திற்கு பிரவேசிக்கும்; (இங்குரு கடை சந்தி) பாலத்தின் நடுவில் இருந்து மூடப்படும். இதன் காரணமாக அவ்விடத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கியும், கட்டுநாயக்கவில் இருந்து … Read more

நாடு முழுவதும் சீரான வானிலை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளினால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கப் போவதில்லை. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களையும், தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளையும் முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (09.02.2024) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் – ‘இந்த நாடு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சிப் பெறவில்லை. முழுமையான மீட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இதன்போது … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா!!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘எழுச்சிப் பொங்கல் விழா – 2024’ கடந்த வியாழக்கிழமை (08) வந்தாறுமூலை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து நடாத்திய இந்நிகழ்வின் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது 108 பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பொங்கல் விழாவில் பிரதி உபவேந்தர் கலாநிதி பிரபாகரன், கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி … Read more

குழுக்கள் சிலவற்றுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெயர்களுக்கு அமைய உறுப்பினர்கள் நியமனம்

குழுக்கள் சிலவற்றுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெயர்களுக்கு அமைய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் நேற்று (09) ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளுக்கு அமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு போன்ற குழுக்களுக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த … Read more

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சு கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு … Read more

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும்.

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (09) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிவ்… மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 2 லட்சத்து 51 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன, சுமார் … Read more

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை (08) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் ஆகியன ஊடாக பாராளுமன்றத்துக்கு வழங்கிவரும் ஆதரவுகளுக்கு … Read more