இராணுவத்தினரால் ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கு பால்மா பொதிகள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கான பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (9) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் மற்றும் கணக்காளர் டிலானி ரேவதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இப் பால்மா பொதி 233 ஆம் இலக்க இராணுவ படையின் அனுசரணையுடன் ஏழு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த ஆழ்ந்த சிக்கலில் உள்ள 272 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. … Read more

பாதுகாப்பான மற்றும் வளமான இந்து சமுத்திரத்திற்காக ஒன்றிணைவோம்

இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க விரிவான திட்டம் அவசியம். இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 05 ஆண்டுகளுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் – 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல். உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் … Read more

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகும்..

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (09) ஆரம்பமாகவுள்ளது. மூன்று சுற்றுக்களைக் கொண்ட இந்த ஒரு நாள் போட்டியின் முதலாவது போட்டி, கண்டி – பல்லேகல விளையாட்டு மைதானத்தில் பி;.ப 2.30 க்கு இரவு, பகல் போட்டிகளாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர், சகல துறை ஆட்டக்காரர், தசுன் ஷானக இந்த ஒரு நாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பதிலாக சாமிக கருணாரத்ன அணியில் களமிறங்கவுள்ளார். அத்துடன், … Read more

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

தம்புள்ளையில் புதிய உயர்கல்வி நிறுவனம் நிறுவப்படவுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், நேற்று (பெப். 8) இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை மேற்படி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார வரவேற்றார். அத்துடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலுள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் … Read more

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலியா வாழ். இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலிய பேர்த் நகரில் வசிக்கும் அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்று (09) சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது குறித்து புலம்பெயர் இலங்கையர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அவற்றுடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் வேலைத் திட்டத்தைப் பாராட்டிய புலம்பெயர் இலங்கையர்கள், காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர். இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த … Read more

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிற்கும் (Penny Wong) இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் இடம்பெற்றது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில், இலங்கை ஜனாதிபதியை மரியாதையுடன் வரவேற்ற அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், இந்த மாநாட்டுக்கு இலங்கை வழங்கிய சிறப்பான ஆதரவையும் பாராட்டினார். இந்து சமுத்திரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பு … Read more

1200 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இனைந்து 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி சிலாவத்துறை, நானட்டான் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது ஆயிரத்து இருநூறு (1200) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து 2024 பெப்ரவரி 07 … Read more

பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலை…

இந்த ஆண்டு பெரும்போகத்தில்; விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளதுடன், நெல் கொள்வனவு செய்வதில் விவசாயத்த திணைக்களம் கடைபிடிக்கும் குறைந்தபட்ச விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள், நெல் களஞ்சிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், நெல்லை சேகரிப்போர் ஆகிய 3 துறைகளுக்கும் சலுகை கடன் அடிப்படையில் அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன் தொகையொன்றினை வழங்கி, அவர்கள் ஊடாக நெல்லை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயத் … Read more

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் (Premier) ரோஜர் குக் உடன் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்

ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டிலும் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ளார் இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று (09) பேர்த் நகரில் நடைபெற்றது. இலங்கைக்கும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் முதல்வர் (Premier) ரோஜர் … Read more

மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (பெப்ரவரி 8) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் லத்தீப் ஆகியோரிக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, இராணுவ பயிற்சி, மூலோபாய கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. … Read more