இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை

ஆரம்பம் முதல் இன்று வரை உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடி ஏற்பட்டது. சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து விடுபட முடிந்தது. வேறு சில சந்தர்ப்பங்களில், நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. நெருக்கடியைச் சபித்துக் கொண்டிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நெருக்கடிக்கான காரணங்களை விமர்சிப்பதன் மூலம் மீள முடியாது. நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தான் உலகமும் நாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது. நெருக்கடி முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக … Read more

காணி விடுவித்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று (6) காலை 9.30மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை விடுவித்தல் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நந்திக்கடல், கொக்கிளாய், நாயாறு … Read more

சீன பிரதித் தூதுவர் ஸு யன்வெய் (Zhu Yanwei) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஸு யன்வெய் (Zhu Yanwei) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவர் கிவின் லிகொங் (Qin Ligong) அவர்களும் கலந்துகொண்டார். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு … Read more

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் 2024.02.07ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி மு.ப 10.30 மணிக்கு முன்வைப்பார் மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகன பவனி இடம்பெறாது ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று … Read more

ஆப்கானிஸ்தான் அணியைத் தோல்வி அடையச் செய்து இலங்கை அணி 10விக்கட்டுக்களால் வெற்றி 

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு  இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்களால்  (05) நேற்று வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு வரவழைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இந்த இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் 198 ஓட்டங்களைப் பெற்றனர்.                                       … Read more

76வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு அலுவலகத்தினை சிக்கனமாக அலங்கரித்தல்!!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இன ஒற்றுமை , நல்லிணக்கம் சுதந்திரதினத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைதல்” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலகத்தினை சிக்கனமாக அலங்கரிக்கும் வகையில் கிளைகளுக்கு இடையிலான புதிய ஆக்க சிந்தனை போட்டியானது ஏற்பாடு செய்து (04)  நடாத்தப்பட்டது. இதன் போது உருவாக்கப்படும் ஆக்கங்களானது கழிவுப் பொருட்களை உபயோகித்து, சக்தி மாற்றீடுகளை உபயோகித்து, பசுமை வெளிப்பாடாக, சுற்றாடல் நேயமிக்கதாக அமைதல் எனும் அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

மார்ச் மாதம் 21ஆம் திகதி தேசிய கடற்படை வீரர்களின் தினமாக தீர்மானம்

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21ஆம் திகதியை “தேசிய கடற்படை வீரர்கள் தினம்” என பிரகடனப்படுத்துவதற்காக துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த தீர்மானத்தை அமைச்சரவை  அனுமதித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு கடற்படையினரால் வழங்கப்படும் பங்களிப்பை  வரவேற்பதற்காக தேசிய கடற்படை வீரர்கள் தினமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அதனூடாக கடற் தொழிலில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காகவும்,  அதன்பால் ஈர்ப்பதனால்  வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக மற்றும் சமுத்திரப் பிரிவின் சேவையை அதிகரிப்பதனால் தேசிய பொருளாதாரத்திற்கு … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024  பெப்ரவரி 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

புரட்சியின்றி நாட்டு மக்களின் முழுமையான காணி உரிமையை உறுதிப்படுத்தியமை அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும்

• அனைத்து மக்களும் பெருமையுடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி. • அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு. காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தற்போதைய அரசாங்கம் பெற்ற முதல் … Read more

தொழிலாளர் சட்டத்தை புதிய யுகத்திற்கு ஏற்றதாக மாற்றுதல் மற்றும் உத்தேச புதிய சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டத்தை புதிய உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றுதல் தொடர்பாக மற்றும் புதிய தொழில் பாதுகாப்பு சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட இதன்போது அமைச்சர் புதிய தொழில்  பாதுகாப்பு சட்டம் ஊடாக ஏற்படும்  நன்மைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக விரிவாகத் தெளிவுபடுத்தினார். இதன்போது தொழில் … Read more