மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் வளர்ப்பு ஆடுகள் கையளிப்பு

பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விவசாய அமைச்சினால் ஆடு வளர்ப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆடு வளர்ப்பு திட்டத்தின் மூலம்  மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு, ஒரு பயனாளிக்கு சுமார் 75000 ரூபாய் பெறுமதியான மூன்று ஆடுகள் வீதம் வழங்கப்படுகின்றது. இந்த வகையில், மன்னர் மாவட்டத்தில் மொத்தமாக 120 பயனாளிகளுக்கான ஆடுகள் வழங்கும் வேலை திட்டத்தின் கீழ் மன்னார் நகர பிரதேச பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 … Read more

புதுருவகல பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது குறித்த மாணவர்களால் தங்களின் பாடசாலைக்கு இசைக் கருவிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். தங்கள் … Read more

மாத்தறை கலை விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை மற்றும் சர்வதேச நடைமுறை கலை – இசையை மையப்படுத்திய கலை விழா (MFA) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (02) ஆரம்பமானது. பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான கலாச்சார சமூகத்தின் ஒத்துழைப்புடன் கலை அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த கலை விழா இன்று முதல் பெப்ரவரி 04 வரை மாத்தறை கோட்டையில் நடைபெறுகிறது. காலி சாகித்திய விழாவின் பின்னர், வருடத்தின் ஆரம்பத்தில் மாத்தறையின் தென் கரையோரப் பகுதிகளில் கலை விழா நடத்தப்படுவது இலங்கையருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் … Read more

76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது

• தாய்லாந்து பிரதமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். • புனித பாப்பரசர் பிரான்சிஸ், மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பு. 76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு உலகில் உள்ள அனைவரின் … Read more

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  76வது தேசிய சுதந்திர தின வைபவம்!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76வது தேசிய சுதந்திர தின வைபவம் மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் இன்று (04) திகதி காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இவ்வைபவம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன்  தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதன்போது மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,  செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் அரசாங்க அதிபர் தனது  தேசிய சுதந்திர தின … Read more

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளன. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 22.12.2023 வெள்ளிக்கிழமை முடிவடைந்ததுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்ததது. ஆனால் உயர்தர பரீட்சசயின் விவசாய விஞ்ஞானம் பாடத்திற்கான வினாத்தாள் மீண்டும் ஒருமுறை நடத்தப்பட வேண்டியிருந்ததால், பாடசாலைகளுக்கான விடுமுறையை நாளை வரை … Read more

தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (03) இரவு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டனர். ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்றார்.பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அதன் பின்னர் இரு தரப்பினரும் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர். இதனிடையே, ஜனாதிபதி மாளிகையில் உள்ள புராதன ஓவியங்களையும் பார்வையிட்ட … Read more

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் கைசாத்து

• இரத்தினக்கல் ஆபரணங்கள் துறைஜ மற்றும் விமான சேவைகள் தொடர்பிலான ஒப்பந்தங்களிலும் கைசாத்து. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவீசின் முன்னிலையில் இடம்பெற்றது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தம் வெச்சயச்சாய் மற்றும் இலங்கையின் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு … Read more

சுபீட்சமான இலங்கைக்காக உலக நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயலாற்றுவோம்

இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு பொருளாதார ஒற்றுமையின் மைல்கல்லாகும் – ஜனாதிபதி. • தாய் சர்வதேச விமான சேவை மார்ச் மாதம் முதல் கொழும்பு – பெங்கொக் இடையில் நாளாந்தம் ஆரம்பிக்கப்படும். • இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு இரு நாடுகளினதும் உறவுகளை புதிய பாதையில் கொண்டுச் செல்ல உதவும். • வலயத்தின் பலதரப்பு கலந்துரையாடல்களுக்கு அமைவான இலக்குகளை அடைய இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் – தாய்லாந்து பிரதமர். சுபீட்சமான இலங்கைக்காக … Read more

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

இலங்கையின் 75ஆவது சுதந்திரத்தின தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், துன்பங்களைச் சகித்துக்கொண்டு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்ததால் எம்மால் மெதுவாக முன்னேற முடிந்தது. இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லும் போது, சிரமங்கள் யாவும் மறைந்துவிடும். வாழ்க்கைச் சுமை குறையும் பொருளாதாரம் … Read more