பொதுவான வானிலை முன்னறிவிப்பு,

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் … Read more

நிறுவை கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், வருடாந்தம் நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகளை அளவீட்டு அலகுகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு இவ்வருடத்திற்கான முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் நேற்று(30) முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத் திட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகம் இரண்டில் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, 12 மாதகாலப் பகுதியில் முத்திரையிடாத வர்த்தகர்கள் தராசுகளுக்கு முத்திரையிட்டுக் … Read more

இலங்கை இராணுவ வைத்திய படையின்’ 10 வது குழு தென் சுடானுக்கு புறப்பட தயார்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் செவ்வாய்க்கிழமை (30) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுக்கு மரியாதை செலுத்தியது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட … Read more

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு ஆளுனர் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது!!

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி பி.ப 3.00 மணிக்கு நடைபெறவுள்ள சுதந்திர தின விழா தொடர்பான முன்னோட்ட கூட்டம் ஆளுநர் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன், இக் கள விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு … Read more

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் நேற்று (30) தொழில்நுட்ப முறைமையினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டது. “உரித்து” வேலைத்திட்டத்தின் … Read more

ஐக்கிய இராச்சிய கப்பல் ‘HMS Spey’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொன்டு கொழும்பு வருகை

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய இராச்சிய கடற்படைக் கப்பல் ‘HMS Spey’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர் என்று கடற்படை ஊடகம் தெரிவிக்கிறது. 90.5 மீ நீளமுள்ள கடல் ரோந்துக் (OPV) கப்பலான ‘HMS Spey’, 56 கடற்படைப் பணியாளர்களைக் கொண்டது. இவ்விஜயத்தின் போது கப்பலின் பணியாளர் குழுவினர் பல உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர். HMS Spey … Read more

இராணுவத் தளபதி காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயை நேரில் பார்வையிடல்

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். திறந்த வான் பாய்ச்சலின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இராணுவத் தளபதி, அதிகாரி மற்றும் சிப்பாயிடம் தனித்தனியாகப் பேசி, தனது வருத்ததினை வெளிப்படுத்தி, … Read more

இரத்துச் செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான பாட பரீட்சை நாளை

இரத்துச் செய்யப்பட்ட உயர் தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான வினாப்பத்திரத்திற்கு பதிலாக இடம்பெறவுள்ள புதிய பரீட்சை (01) நாளை இடம்பெறவுள்ளது.  பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தை www.doenets.lk இணையத்தளத்தில் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு தற்போது அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப் பட்டுள்ளதுடன் அவை கிடைக்கப்பெறாதவர்கள் மாத்திரம் இணையத் தளத்தில் பிரவேசித்து அனுமதிப் பாத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பரீட்சார்த்திகள் இரத்துச் செய்யப்பட்ட பரீட்சைக்காக தோற்றிய … Read more

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ..

ஷசீந்திர ராஜபக்ஷ நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது காயமடைந்த பரசூட் வீரர்கள் குணமடைந்துள்ளனர்

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையில் கலந்து கொண்ட போது காயமடைந்த நான்கு பரசூட் வீரர்களினதும் உடல்நிலை நன்றாக இருப்பதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு; குறித்து அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மூன்று விமானப்படை வீரர்களும் மற்றும் ஒரு இராணுவ வீரரும்; விபத்தில் சிக்கினர். அவ்விடத்தில் ஒருவருக்கு … Read more