நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் … Read more

தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும்

தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும் என்றும் இச்சட்டத்தின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு எவ்வித வரையறையும் ஏற்படுத்தப்படாது என வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய குறுகிய நோக்கங்களுக்கு சமூக ஊடகங்களை உந்து சக்தியாக பயன்படுத்துதல் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது தடுப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். … Read more

கடும் போட்டிக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் நேற்றைய (30) முதல் போட்டியில் இலங்கை அணி கடும் போட்டிக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 3 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில்; வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளைஞர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 231 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.  மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் … Read more

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித்த பண்டார தென்னகோன், (ஜன. 29) மாலை ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) இலங்கை வந்தடைந்தது. கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் போல் கெட்டி வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், … Read more

அரபிக் கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா 4” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்பு

அரபிக்கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா4 ” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் நேற்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிப்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஆழ்கடல் மீன்பிடிப் படகான ”லொரன்சோ புதா 4” கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 06 மீனவர்களுடன் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது. கரையில் இருந்து … Read more

கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.. நாட்டில் தற்போது கட்டுமான அபிவிருத்திகளுக்குத் தேவையான கருங்கல் தேவை ஒப்பீட்டு ரீதியில் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் கருங்கல் அகழ்வு தொழிற்துறையில் ஈடுபடுகின்ற அகழ்வோர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகத்தவர்களின் வாழ்வாதார வழிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையின் கீழ் கருங்கல் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுகின்ற வேலைத்திட்டமொன்றை குறுகிய … Read more

உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.. 2023/2024 பெரும்போக நெல் கொள்வனவுக்கான சலுகை வட்டிவீதத்தின் கீழ் அரச மற்றும் தனியார் வங்கிகள் வாயிலாக மடபண கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 05 வருடகால போகங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விளைச்சலை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தேச கடன் திட்டத்தின் கீழ் 09 பில்லியன் ரூபாய்கள் கடன் வழங்குவதற்கு … Read more

நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை..

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுச் … Read more

கோலாகலமாக இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் மாவட்ட பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (30) இடம் பெற்றது. தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட மேலதிக … Read more

புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து அதிக கவனம் – கல்வி அமைச்சர்

நாட்டில் நான்கு வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை அதனால் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து புதிய கல்வி சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (29) தெரிவித்தார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது, உலகில் இது குறித்து அதிக … Read more