இந்த வருடம் அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதால் அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது

தேயிலை உரம் விலை குறைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது – அமைச்சர் மஹிந்த அமரவீர. அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் … Read more

உயர்கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

கடந்த 30 வருடங்களாக உயர்கல்வித்துறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் உயர்கல்வி முறையில் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;. 20222ஃ2023 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 263000 மாணவர்களில் 62 வீதம் அதாவது, 84000 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர்களில் … Read more

76வது சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையை முன்னிட்டு கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

2024 பெப்ரவரி 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான போக்குவரத்து திட்டத்தை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல்; வரையும், செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (30) முதல் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி … Read more

அரசியல் கருத்து வேறுபாடுகள் விவாதங்களுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்

அரசியல் தலைமைக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள் நேற்று (29.01.2024) பொலன்னறுவை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல துறைகளின் ஒருங்கிணைந்த பொறிமுறையான “புதிய தோர் கிராமம் – புதியதோர் நாடு” தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் பொலன்னறுவை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- நாம் … Read more

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த இன்று (29) முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

நாட்டின் கடனை பகுதியளவில் செலுத்துவது தொடர்பாக வெளிநாடுகளுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன

இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள கடனை பகுதியளவில் செலுத்துவது தொடர்பான அந்நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கண்டி குட்n~ட் பல்வகைப் போக்குவரத்து வளாகத்தை நிருமாணிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார். அதற்கிணங்க, குறித்த கடன்தொகையில் 37வீதமானவற்றை எதிர்வரும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் செலுத்துவதற்கும், 51 வீதமானவற்றை … Read more

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பத்து வருடங்களாக நிலவி வரும் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு!

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். சண்முகா மகளிர் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை … Read more

பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலைக் பாதணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 01.02.2024 ஆக காணப்பட்டது. அந்தக் காலம் 17.02.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு பாதணி வழங்குநர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐசிசி கிரிக்கெட் தடை நீக்கம்..

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இலங்கைக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை … Read more

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.   துறைமுகத்தின் கொள்கலன் நடவடிக்கைகளும் 72 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜயபஹலு முனையத்தின் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், செங்கடல் நெருக்கடி காரணமாக … Read more