ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இலங்கையின் அனைத்துப் … Read more

காலி அபிவிருத்திக்காக விசேட ஆணைக்குழு

ஒரு நிறுவன கட்டமைப்பின் கீழ் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல். காலி இலக்கிய விழாவையும் ஜனாதிபதி பார்வையிட்டார். காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார். காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் … Read more

வாழைச்சேனையில் காணி உறுதியற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியுறுதி அற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரித்த மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்று காணிக்கச்சேரிகளை நடாத்திய பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் எஸ். எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.சாதாத், … Read more

அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபாய்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாவலராக கடமையாற்றி விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபாவை வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர். பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். அத்துடன், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்; சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

76வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் வீதிகள் தற்காலிகமாக மூடப்படும்

2024 பெப்ரவரி 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள, நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான போக்குவரத்து திட்டத்தை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல்; வரையும், செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் … Read more

கடற்றொழிலாளர் நலனோம்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ்..

கடற்றொழிலாளர் நலனோம்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை உயர்வுகள் தொடர்பாக தமக்கு சலுகைகளைப்பெற்றுத்தர வேண்டும் என்று கடற்றொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதுதொடர்பில் ஜனாதிபதியுடனும், அமைச்சரவையிலும் கலந்துரையாடியுள்ளேன். ஜனாதிபதியும் இவ்விடயம் தொடர்பில் சாதகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளார். அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுபோல் கடற்றொழில் உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போது அதற்காக அறவிடப்படும் வரிகள் தொடர்பிலும் சாதகமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்த அமைச்சர் … Read more

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு நகர்பகுதி மற்றும் பிரதான, சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (26) இடம் பெற்றது. நகர் பகுதியினை அழகுபடுத்தி சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் தெடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.மேலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எதிர்வரும் பருவ பெயர்ச்சியில் வெள்ளம் … Read more

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!!

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் பல் வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (26) திகதி மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற வெல்த் கோப் வங்கியின் நான்வது கிளையின் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வெல்த் கோப் வங்கியின் தலைவர் தேசகீர்த்தி மொகோட்டி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணகௌரி டினேஸ், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி … Read more

3000 மில்லியன் செலவில் 25km நீளமான அம்பாறை உகண மகாஓய வீதியானது காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!!

பதுளை செங்கலடி மீள்நிர்மான மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 25km நீளமான அம்பாறை உகன மகாஓய வீதியானது காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் சவூதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் சுமார் 3000 மில்லியன் செலவில் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி திட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை மற்றும் … Read more

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஏற்றுமதி வலைய பிரிவில் கடற்றொழில் திணைக்களத்தின் உப காரியாலயம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஏற்றுமதி வலைய பிரிவில் கடற்றொழில் திணைக்களத்தின் உப காரியாலயம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. கடலுணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரங்களை கடற்றொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்வது வழமையான நடவடிக்கை என்றபோதும், ஏற்றுமதியின்போது அவசரமாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தேவைகளை செய்வதற்கு கால விரையத்தையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்கு வசதியாக குறித்த உப அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று திறந்துவைத்தார். இத்திறப்பு … Read more