எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாந்து

    • எதிர்காலத்தில் உள்ளூர் சந்தையில் சீனி விநியோகத்தை சீர் செய்வதற்கு நடவடிக்கை • விலை அதிகரிப்பு இன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பேணுவதற்கு லங்கா சதோச தொடர்ந்தும் ஒத்துழைக்கும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (23) நடைபெற்ற … Read more

மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிக்கிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிக்கிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதையளிப்பதாக கல்வி அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சில் (24) இடம்பெற்ற இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதத்தின் … Read more

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்

  • எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும். • பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரித்திருந்தால், சில மாதங்களுக்கு முன்பே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்து இருக்கலாம். நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் … Read more

புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

  மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின் மூலம் மின்சார சபையின் டிசம்பர் மாத நிதி அறிக்கையின் பிரகாரம் ஓரளவு செயற்பாட்டு இலாபம் கிடைக்கும் என நம்புவதாகவும் … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, இப்பன்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 2023 நவம்பர் 22 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் … Read more

தாய்லாந்தின் 2023 யிற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!!

தாய்லாந்தில் இடம்பெற்ற 2023 யிற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார். தாயலாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், நேற்று 24 முதல் தாய்லாந்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றியுள்ளார். இந்நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்ரேலியா, கென்யா, கட்டார் போன்ற 100 யிற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இராஜ தந்திரிகள், அரசியல் தலைமைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து  (2023 நவம்பர் 23) ஓய்வு பெற்றார். தனது 55வது பிறந்தநாளில் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. … Read more

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாடு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடியும்

அதற்குத் தேவையான இலத்திரனியல் கடல்சார் விளக்கப்பட வடிவமைப்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன். இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். நாரா நிறுவனத்துடனான … Read more

காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது எதிர்கால பொருளாதாரத்திற்காக செய்யப்படும் ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் – மனுஷ நாணாயக்கார

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன் மூலம் சுதந்திரமான பொருளாதார செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும், எனவே இது எதிர்கால பொருளாதாரத்திற்கான ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் எனவும் … Read more

நியமனங்களைப் பெற்ற அதிபர்கள் புதிய தவனையின் போது பாடசாலைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்

தற்போது 4,672 அதிபர்களுக்கு புதிய நியமணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர், ஆரம்பமாகும் பாடசாலை தவனையின் போது இவர்கள் பாடசாலைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிரி ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தரர். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. இந்த ஆசிரியர்கள் தற்போது மாகாண மட்டத்தில் மாதாந்த பயிற்சிகளை பெற்று வருகின்றனர். கஷ்டப்புற பாடசாலைகளில் தற்போது கடமையாற்றும் … Read more