ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக புதிய வேலைத்திட்டம் மற்றும் சுற்றுநிருபம் தயாரிக்கப்பட வேண்டும் – ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர்

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக புதிய வேலைத்திட்டம் மற்றும் சுற்றுநிருபம் என்பன தயாரிக்கப்பட்டு மாகாண மட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர் அல்லாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்றத்தின் போது சாரி அதிக வேறுபாடு காட்டப்படுகின்றது. ஆசிரியர் இடமாற்ற சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் இடமாற்ற பட்டியலை தயாரிப்பின் அது தவறான செயற்பாடு என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சபாநாயகர் மகிழ்ந்த யாபா அபேவர்தனவின் … Read more

வவுனியா மாவட்டத்தின் விவசாயிகளுக்காக டொம் ஈ.ஜே.சீ. வகை 84,000 மாமரக் கன்றுகள் வழங்கும் திட்டம்

வவுனியா மாவட்டத்தின் விவசாயிகளுக்காக ஈ.ஜே.சீ. வகை 84,000 மாமரக் கன்றுகள் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மன்னார், வவுனியா மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் வாழும் மக்களுக்காக ஈ.ஜே.சீ. வகை 84,000 மாமரக் கன்றுகள் வழங்குதல் தொடர்பாக மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாநாதன் எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். வவனியா மாவட்டத்தில் ஒவ்வொரு … Read more

இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர்

இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் பெப்ரவாரி மாதம் 2ஆம் திதி வரை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சமன்ப்ரிய ஹேரத் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தரர். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி பாடநெறிகள் பல ஆரம்பிக்கப்படும். தேசிய கல்வி … Read more

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்

அதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் தயார்- ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள … Read more

பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான நேற்று (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.00 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். தற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்..

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகமும் இணைந்து நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் வியூகங்கள் அமைக்கும் ஆய்வுக்கூட்டம் கொழும்பில் ஹில்டன் விருந்தகத்தில் நேற்று (23.11.2023) நடைபெற்றது. இதன்போது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதி உதவிகளை வழங்குவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஆமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 24ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 23ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த … Read more

அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. எனவே அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதோடு, சித்ரசிறி அறிக்கைக்கமைய புதிய கிரிக்கெட் சட்டமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தான் பல தடவைகள் விளக்கியிருந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று (22) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் … Read more

ஜனாதிபதிக்குரிய செலவுத்தலைப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதலாவது நாளான நேற்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதிக்குரிய செலவுத்தலைப்பு 59 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 62 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மலைநாட்டு புகையிரத வீதியில் இன்று நானுஓயா வரை மாத்திரமே பயணிக்கலாம்

தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக மலைநாட்டு புகையிரத வீதியில் மலை சரிந்து விழுந்ததனால் இன்று(23) நானுஓயா வரை மாத்திரமே பயணிக்கலாம். அவ்வாறே பதுளை புகையிரத நிலையத்தில் ஆரம்பமாகும் சகல புகையிரதங்களும் இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. அதனால் பிரதானமாக நுவரெலிய மாவட்டத்தின் புகையிரதப் பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக பெருகும்புர, அபேவெல, பட்டிபொல, மக்கள் பாரியளவில் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.