பங்களாதேசின் 52வது படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

பங்களாதேசின் 52வது படைவீரர்கள் தின விழா கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் (நவம்பர், 21) இடம்பெற்றது. இதில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் ஆரிபுல் இஸ்லாம் வரவேற்றார். ஜெனரல் குணரத்ன இங்கு உரையாற்றுகையில், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போது காணப்படும் இருதரப்பு உறவுகளைப் பாராட்டியதுடன், நீண்டகால உறவுகளை மேலும் … Read more

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் 

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்திய மீனவப் படகுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்புக் குறித்தும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த … Read more

வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்திதியோகத்தர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம்

வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்திதியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு … Read more

வடக்கு – கிழக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (22.11.2023) நிதி அமைச்சில்; கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi Hiddheki) நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர். அண்மையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi Hiddheki) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தபோது கலந்துரையாடப்பட்டமைக்கு அமைய, … Read more

நாட்டை ஆழ்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கூட்டுப்பொறுப்போடு உழைக்க வாருங்கள் – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

கடற்றொழில் அமைச்சராக வருவதற்கு முன்னரே எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள், நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் … Read more

அடிப்படைத் தேவைகள் உள்ள முதியோருக்கு உதவி வழங்கும் திட்டம்!!

அரசாங்கத்தினால் முதியோர்களை கௌரவிக்கும் நோக்கில் தங்களது வீடுகளில் வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகம் தோறும் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் அவர்களது வழிகாட்டலில் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அறுபது வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான கட்டில், மெத்தை, மின்விசிறி போன்ற பொருட்களை கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம் … Read more

நீண்டகால இலக்குகளுடனான வேலைத்திட்டத்தினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இலங்கையை பொதுநல நாடாக கொண்டுச் செல்ல வேண்டுமெனில் வரிக் செலுத்தாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை இவ்வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு. 2023 நவம்பர் 22 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவான … Read more

தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிடிய எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை விடுவிப்பது தொடர்பில் … Read more

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் நேற்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.00க்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் … Read more