பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும் – சபாநாயகர்

சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஒழுக்கமற்ற செயற்பாடு வன்மையாகக் கண்டிக்கப்படுவதாகவும், அதற்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

சீன அரச சபை உறுப்பினர் ஷென் யிகின் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பு

சீன அரச சபை உறுப்பினர் கௌரவ ஷென் யிகின் (Shen Yiqin) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கி சென் ஹொங் ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கிவரும் ஆதரவுகள் … Read more

4 வருடங்கள் பூர்த்தியாகிய சிறுவர்களுக்கு முன் பள்ளிக் கல்வியைக் கட்டாயப்படுத்தும் சட்டம் – கல்வி அமைச்சர்

4 வருடங்கள் பூர்த்தியாகிய சிறுவர்களுக்கு முன் பள்ளிக் கல்வியைக் கட்டாயப்படுத்தும் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று சபைத் தலைவரும் கல்வி அமைச்சருமான கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், பொருளாதார சிக்கல்கள் காணப்படுகின்ற குழந்தைகளுக்காக, எதிர்காலத்தில் free primary பாடசாலைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அதன்படி, மாணவர்கள் தரம் 10 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டிலுள்ள பாடசாலைகளில் … Read more

வரி வலையமைப்பை பரவலாக்க வேண்டும் – கடினமான பொருளாதார தீர்மானத்தை மேற்கொள்வது அவசியம் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

வரி வலையமைப்பு பரவலாக்க வேண்டும் எமது பொறுப்பு நாட்டிற்காக எதையாவது செய்வதற்கு உள்நாட்டு வருமான வரி அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது தடவை வாசிப்பின் நீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் கடந்த வருடத்தில் பொருளாதார ஸ்தீரனமின்மை ஏற்பட்டதனால் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வரவு செலவுத் திட்டம் … Read more

‘ரீட் மாவத்தையின் நூற்றாண்டு நிறைவை’ முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்பட்டது

கொழும்பு றோயல் கல்லூரி பிரதான மண்டபத்திற்கு நூற்றாண்டு நிறைவடைவதை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (21) கல்லூரியில் நடைபெற்ற 79 ஆவது Philex கண்காட்சியுடன் இணைந்ததாக விசேட நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. நூற்றாண்டு நினைவு முத்திரை, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவினால், சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டது. றோயல் கல்லூரி முத்திரைக் கழகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் The Royal Philatelist நூலும் சாகல … Read more

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையைக்கான உர மானியக் கொடுப்பனவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023/2024ம் ஆண்டிற்கான காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு ஹெக்டேயர் ஒன்றுக்கு ரூபா.15,000.00 வீதம் உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இதுவரை நான்கு கட்டங்களாக ரூபா. 163,295,028.00 வைப்புச் செய்யப்பட்டுள்ளது. உர மானியக் கொடுப்பனவு தொகையினை கமநலசேவை நிலையவாரியாக கீழே விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை https://www.agrarian.lk/ என்ற இணையத்தள முகவரியினுள் பிரவேசித்து FARMER INFORMATION என்பதை click செய்து தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் … Read more

“பெடிகலோ ஹேண்ட்லூம்” உற்பத்தி நாமத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெசவுக் கைத்தொழிலை முன்னேற்ற நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் “பெடிகலோ ஹேண்ட்லூம்” என்ற உற்பத்தி நாமத்துடன் நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுதல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நேற்று (21) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அவசியமான விடயங்களை உள்வாங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது. நெசவுக் கைத்தொழிலுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் சாரம், சாரி, படுக்கை விரிப்பு, போன்றவற்றை உற்பத்தி செய்வதில் சுமார் 650 சுயதொழில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு … Read more

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி மட்டக்களப்பில் ஆரம்பம்!!

மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக் கல்வியை கற்று விலகிய இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கற்றை நெறி (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கற்கை நெறி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.எ.சீ.எம். றியாஸின் தலைமையில் (21) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் அதன் … Read more

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலையில் இன்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 22 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலையில் இன்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, … Read more

மின்சாரத் துறை சீர் திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மின்சாரத் துறையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின்சாரச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை, முன்னர் அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மின்சார அமைச்சராக காஞ்சன விஜேசேகர … Read more