சிறந்த ஊடக கலாச்சாரத்தை நோக்கி பயணிப்போம்…

இன்றைய உலகத் தொலைக்காட்சி தினத்தில் நாம் ஒன்றிணைந்து மிகச் சிறந்த ஊடகக் கலாச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு உறுதி ஏற்போம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;. உலகத் தொலைக்காட்சி தினத்தன்று, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், என்ற வகையில், உலகிலும் நம் நாட்டிலும் தொலைக்காட்சி தொடர்பாடலில் … Read more

எதிர்காலத்தில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில் இ-மோட்டாரிங் … Read more

மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தை எமது தனிப்பட்ட இலக்குகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும்

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் தனிப்பட்ட இலக்குகளிலிருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இல்லையெனில், சிறந்த வரவு செலவுத் திட்டங்கள் கைவிடப்படும். எது சரியோ அதைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் காட்ட வேண்டும். நாட்டின் … Read more

இலத்திரணியல் ஊடகங்களுக்கான ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக் குழச் சட்டம்

இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமொன்றை ஸ்தாபிக்குமாறு ஊடகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சரவைக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலத்திரனியல் ஊடகங்களுக்காக ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தை உருவாக்குவதற்கான யோசனையானது பேச்சு மற்றும் கருத்து … Read more

பணம் கிடைக்கும் விதத்தைப் பொறுத்து நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் – விவசாய அமைச்சர்

பணம் கிடைக்கும் விதத்தைப் பொறுத்து நெல்லை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், போதியளவு அறுவடை காணப்படுவதால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உர விநியோக திட்டங்கள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த போகத்தின்போது, உரிய நேரத்தில், உரிய திகதிக்கு முனனர்;, உரம் வழங்கப்பட்டது. … Read more

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு இளைஞர் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்

இளைஞர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு. தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வு கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்ற அவையில் நடைபெற்றது. “இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை திறம்பட பயன்படுத்துவதற்கான இளைஞர்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுதல்” என்பதே இவ்வருட … Read more

மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளன

மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி, அந்த நிவாரணங்களை எவ்வாறு வழங்குவது என்பதை எடுத்துக் காட்டிய இம்முறை வரவு செலவுத் திட்டம், நிச்சயம் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் … Read more

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கூடுதல் கவனம். சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே … Read more

நாட்டில் சீனி தட்டுப்பாடு ஒன்று ஏற்படுவமற்கான வாய்ப்பு இல்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசாங்கத்தினால் சீனிக்கான வரி அதிகரிப்பதற்கு முன்னர் இறக்குமதி செய்த 19,000 மெற்றிக் தொன் சீனி சந்தையில் காணப்படுவதாகவும் அதனால் சீனிக்கான தட்டுப்பாடொன்று ஏற்பட மாட்டாது, அதிகமான விலை விதிப்பு மேற்கொள்வதற்கான எத்தகைய அவசியமும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிர்ணய விலையில் சீனியை கொள்வனவு செய்தல் மற்றும் … Read more

பாலியல் இனப்பெருக்கம் தொடர்பாக நாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு போதுமானதாக இல்லை

பாலியல் இனப்பெருக்கம் தொடர்பாக எமது நாட்டின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு போதுமானதாக இல்லை என மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் சுமித்ரஆரச்சி முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு விபரித்தார். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆய்வுகளுக்கு இணங்க நாட்டில் 2287 சிறுவர் தாய்மார்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பாலியல் கல்வி தொடர்பான … Read more