இந்நாட்டின் நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. காலநிலைக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நீர் … Read more

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் வெளி நபர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் வெளி நபர்கள் கலந்துகொள்ளல் மற்றும் குழுக்களின் பணிகள் தொடர்பில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டார். பாராளுமன்றத்தில் தற்பொழுது செயற்படும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களுக்கு குழுவின் உறுப்பினர்கள், குழுவின் தலைவரின் முறையான அனுமதிக்கமைய வருகைதரும் குழுவின் உறுப்பினர்களல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்களின் பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் குறித்த குழுவில் பணியாற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் அதிகாரிகளுக்கும் மாத்திரம் அந்தக் குழுக் … Read more

கிழக்கு மாகாணத்தில் நான்கு மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல கிராமத்திற்கு விஜயம் செய்த போது அப்பகுதி மக்கள் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை முன்வைத்ததுடன், அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரின் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க 34 மில்லியன் ரூபா பெறுமதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோனோகொல்ல கிராமத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆளுநரின் முயற்சியால் கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் … Read more

வரலாற்று மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2024 வரவு செலவு திட்டத்தினை சமர்பித்துள்ளோம்

இரண்டாவது “உலக தெற்கின் குரல்” மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி உரை. வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிகழ்நிலை முறையில் “உலக தெற்கின் குரல்” அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு (17) ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம்…

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று (17.11.2023) அலரி மாளிகையில் இடம்பெற்றது. வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார். வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய புதிய வழிமுறைகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை விரைவில் புதிய வெளிநாட்டு முதலீட்டுச் சட்டமூலத்தை வரைய திட்டமிட்டுள்ளதால், அதற்காக வியட்நாமின் நிபுணத்துவ … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  2023 நவம்பர் 19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் இடியுடன் கூடிய … Read more

தெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

  இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு சுற்றுலா வலயம் – ஜனாதிபதி. தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்தும் வலியுறுத்தினார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (18) இடம்பெற்ற YPO Colombo Experience: Rediscover the Pearl மாநாட்டில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தெற்காசிய பிராந்தியத்தில் … Read more

வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி – சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கனெ 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – … Read more

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடு

  நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் நேற்று (18.11.2023) வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், அவர்களுக்கு பிரத்யேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது. நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் … Read more

அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

  அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கு அமைய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கே.டி.என்.ஆர். அசோக்கவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி கே.டி.செனவிரத்னவை நியமிப்பதற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஆர்.பி. போகல்லாகமவை நியமிப்பதற்கும் … Read more