IMF இன் இரண்டாவது தவணை டிசம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

  சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறுகிய கால இலாப நோக்கமின்றி வீழ்ச்சியடைந்த தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக … Read more

ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் உள்ளிட்ட நான்கு சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

  அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார். அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் … Read more

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்; 100 மி.மீ அளவான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 17 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ … Read more

நாட்டின் ஊழல்களைத் தடுப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனத்திற்கு பொருத்தமான வகையில் உரிய சம்பளம் அளவு வழங்கப்பட வேண்டும்

நாட்டின் ஊழல்களைத் தடுப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனத்தின் பதவி தனித்துவமானது என்பதால் அதன் கௌரவம் மற்றும் பெறுமதிக்குப் பொருத்தமான வகையில் உரிய சம்பளம் அளவு மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும் – மீண்டும் கருத்தில் கொண்டு அமைச்சரவை அனுமதியை மீண்டும் பெறுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவரின் சம்பள அளவு மிகவும் வலுவானதாக … Read more

அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச கிரிக்கெட் தடையை நீக்க வேண்டும் – ஹரின் பெர்னாண்டோ

அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச கிரிக்கெட் மீதான தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கட் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று; கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கெட் மீதான தடையை ஐ.சி.சி நீக்காவிட்டால், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டித் தொடரை நாடு இழக்க நேரிடும் எனவும், இதன் விளைவாக நாட்டிற்கு வருகை தரவிருக்கும் சுமார் 800 … Read more

தரம் குறைந்த அல்லது அறிக்கைகள் மூலம் நிராகரிக்கப்பட்ட எரிபொருட்களை இலங்கைக்கு கொண்டுவர அனுமதிக்கவில்லை.

தரம் குறைந்த அல்லது அறிக்கைகள் மூலம் நிராகரிக்கப்பட்ட எரிபொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தினாரர். எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர் இன்று (17) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.. பெட்ரோலிய சேமிப்பு முனையம் எரிபொருள் இறக்குமதி தொடர்பாக சோதனைகளை நடத்தி சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த முறைகளை பின்பற்றி கொலன்னாவ … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் … Read more

அனைவரும் சுமூகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கம் – பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க … Read more

“2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம்” வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும்! – ஜனாதிபதி

நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் இந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முன்வருமாறு புலம்பெயர் தமிழ், சிங்களவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு. மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதால் 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான … Read more

நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வரவு செலவுத் திட்டம் – நிதி அமைச்சர்

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வரவு செலவு திட்டமாக இம்முறை அமைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவு திட்ட விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அமைச்சர் இது தேர்தல் வரவு செலவு திட்டம் அல்ல என்றும் வாக்கு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை வாக்குகள் உள்ளன சிலர் சொல்கிறார்கள். இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த வருட வரவு செலவுத்தெட்டின் கார்பன் … Read more