மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி சினிமா விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது

தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனத்தை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைக்க வேண்டும். அரங்காற்றுகைச் சபைக்குப் பதிலாக அரங்காற்றுகை தரம்பிரித்தல் சபை. கலைப்படைப்புகளிலிருந்து “தணிக்கை” என்பது அகற்றப்படும். கலைப்படைப்புகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதைத் தடுப்பதற்கு திருத்தங்கள்- ஜனாதிபதி. இலங்கைத் திரைப்படத்துறை சர்வதேசத் தரத்தை எட்ட வேண்டும். அதற்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் உட்பட அதனுடன் இணைந்த சகல நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு தாமரைத் தடாக திரையரங்கில் … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தில் நிவர்த்திக்க முடியாது – ஜனாதிபதி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாதெனவும், அதற்கு தீர்வு காணும் வகையில் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்திய பின்னர் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் வலுவான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் நேற்று (15) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்விலேயே ஜனாதிபதி … Read more

தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள அரசியல் தீர்வுகள் அன்றி பொருளாதார தீர்வுகள் மாத்தரமே அவசியம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக … Read more

விரைவான பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்

விரைவான பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள். – பிரதமர் தினேஷ் குணவர்தன புதிய இலங்கைத் தூதுவர்களிடம் தெரிவிப்பு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது. உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையிடம் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துமாறும் முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளை ஈர்ப்பதற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் குறிப்பிட்டார். வர்த்தகம் மற்றும் … Read more

உள்ளூராட்சி அமைப்புகளில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் – பிரதமர்

உள்ளூராட்சி நிறுவனங்களில் கடமையாற்றும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை தமது சேவையில் நிரந்தரமாக்கும் கொள்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருருமான தினேஷ் குனவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (16) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 8 ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் சுமார் 13,000 சிற்றூழியர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு தற்போது … Read more

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புதவற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இரண்டாவது தினத்தில் (15) கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார். இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் சமுர்த்தி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் சமுர்த்தியை இவ்வாறு அதிகரித்தமை தவறானது. சமுர்த்தி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 35 வருடங்களாகின்றன. நாட்டில் பொருளாதாரச் சிக்கல் மீண்டும் ஏற்படாதிருப்பதாயின் அப் பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். நமக்கு புதிய மக்கள் சபை … Read more

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரான்ஸ் தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேச்சு

பிரான்ஸ் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார். கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 15) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பேக்டெட் அவர்கள் இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள், குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு, … Read more

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் மாநாடு-2023 இல் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய ஈடுபாட்டின் குறிப்பிடத்தக்க காட்சியாக, ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் நடத்தப்பட்ட இந்தோ பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி (Indo Pacific International Maritime Exposition -2023) மற்றும் இந்தோ பசிபிக் கடல் சக்தி மாநாடு 2023 (Indo-Pacific Sea Power Conference – 2023) 2023 நவம்பர் 06 முதல் 09 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெற்றிகரமாக நடைபெற்றன. உலகெங்கிலும் உள்ள கடற்படைத் தலைவர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் கடல்சார் தொழில் வல்லுநர்களின் … Read more

கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவரான புசான் நகராதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு

கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவரான புசான் நகராதிபதி கௌரவ பார்க் ஹியோங்-ஜூன் (Park Heong-Joon) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று (14) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் கொரியாவின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ பார்க் ஹியோங்-ஜூன் குறிப்பிடுகையில், World EXPO 2030 வர்த்தகக் கண்காட்சி தொடர்பான கொரியாவின் எதிர்பார்ப்பு தொடர்பிலும் இந்தக் கண்காட்சியை … Read more

வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 15 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா … Read more